• November 22, 2024

“அதிசயம் செய்யும் அஷ்டகர்ம மூலிகைகள்..! – நீங்களும் யூஸ் பண்ணலாமே..

 “அதிசயம் செய்யும் அஷ்டகர்ம மூலிகைகள்..! – நீங்களும் யூஸ் பண்ணலாமே..

ashta-karma-herbs

சித்தர்கள் பற்றி அதிக அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை. அவர்கள் பயன்படுத்திய அஷ்டகர்ம மூலிகைகள் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்வதின் மூலம் அவற்றை நீங்களும் பயன்படுத்தி பயனடையலாம்.

 

அந்த வகையில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பது 64 வகையான மூலிகைகளை குறிக்கிறது. குறிப்பாக பண்டைய காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் இந்த மூலிகைகளைக் கொண்டு மந்திரங்களை உருவேற்றி பலவிதமான காரியங்களிலும் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

 

அஷ்ட கர்மங்கள் என்பது எட்டு சித்துக்கள் என குறிப்பிடப்படுகிறது. ஒரு சித்துக்கு 8 மூலிகைகள் என அஷ்ட சித்துக்கு 64 மூலிகைகளை பயன்படுத்துவதன் காரணத்தால் தான் இது அஷ்டகர்ம மூலிகை என்று பெயர் பெற்றது.

ashta-karma-herbs
ashta-karma-herbs

இனி அஷ்டகர்மம் என்பது என்ன என்பதை பற்றி பார்க்கலாம். எட்டு வகையான செயல்களை செய்வது தான் இந்த அஷ்டகர்மம். அவை முறையே

 

1.ஆகர்ஷனம்

2.உச்சாடனம்

3.தம்பனம்

4.பேதனம்

5.மரணம் 

6.மோகனம் 

7.வசியம் 

8.வித்வேஷனம்

 

இதில் முதலாவதாக இருக்கும் ஆகர்ஷனம் என்பதை பற்றி பார்க்கலாம். இந்த கலை நமக்குத் தெரிந்தால் நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திற்கே நம்மால் கொண்டுவர முடியும்.

 

இதற்கு வேளை, உள்ளொட்டி, புறவொட்டி, சிறு முன்னை, குப்பைமேனி, அழுகண்ணி, சிறியாநங்கை, எருக்கு போன்ற எட்டு வகையான மூலிகைகள் உதவுகிறது. 

 

இதில் வேளை மற்றும் குப்பைமேனி மிருகங்களை அழைப்பதற்கும், உள்ளொட்டி அழுகண்ணி பெண்களை அழைப்பதற்காகவும் பயன்படுகிறது.

ashta-karma-herbs
ashta-karma-herbs

சிறுமுன்னை அரசர்கள் மற்றும் பிரபுக்களை அழைப்பதற்கும், புறவொட்டி  துர் தேவதைகளை அழைப்பதற்கும், எருக்கு தேவர்களை அழைப்பதற்கும் சிறியா நங்கை அனைத்தையும் அழைக்க பயன்படுத்தப்படுகிறது.

 

பேய், பிசாசு, கெட்ட ஆவிகள் நோய்களை விரட்டி அடிக்க உச்சாடனம் செய்யப்படுகிறது. இதற்காக பேய் மிரட்டி, தேள் கொடுக்கி, கொட்டை கரந்தை, வெள்ளை கண்டங்கத்திரி போன்ற மூலிகைகள் பயன்படுகிறது.

 

ஒன்றை மற்றொன்றாக மாற்ற பயன்படுவது தான் பேதனம் என்பது இதற்காக வட்டத்துத்தி, மாவிலங்கம், சீந்தில் கொடி, ஆகாயத்தாமரை, வட்டத் தொட்டி போன்றவை பயன்படுகிறது.

ashta-karma-herbs
ashta-karma-herbs

மரணம் என்பது கொல்வது அல்லது மாற்றுவது உலோகங்களை அதன் தன்மையிலிருந்து மாற்றுவது, எதிரிகளுக்கு நோய்களை உண்டாக்குவது தான் இதனுடைய செயலாக இருக்கும் .இதற்கு சித்திரமூலம் ,அம்மான் பச்சரிசி ,கார்த்திகை கிழங்கு, நாவி போன்ற மூலிகைகள் பயன்படுகிறது.

 

மோகனம் என்பது பிறரை நம்மிடம் மயங்க செய்ய செய்வது இதற்கு கஞ்சாவேர், வெண் ஊமத்தை, கோரைக்கிழங்கு, நன்னாரி, கிராம்பு போன்றவை பயன்படுகிறது.

 

எல்லோரையும் நம்மிடம் விருப்பத்தோடும், இஷ்டத்தோடும் இருக்க வைக்க  வசியம் செய்யப்படுகிறது. இதற்கு நில ஊமத்தை, வெள்ளை குன்றுமணி, பொன்னாங்கண்ணி, சென் நாயுருவி, வெள்ளெருக்கு போன்ற மூலிகைகள் பயன்படுகிறது.

வித்வேஷனம் பலரிடையே பகையை உண்டாக்க இந்த முறையை கையாளுவார்கள், அரசர்கள் இடையே பகையை உருவாக்க கருங்காக்கணம் என்ற மூலிகை பயன்படுகிறது. திருகுகள்ளியை கொண்டு தேவர்களுக்கும், ஆடுதின்னாபாளை கொண்டு பூதப்பிசாசுகளுக்கும், பூனைகாலியை கொண்டு பெண்களுக்கும் பகையை உண்டாக்க முடியும்.