4.76 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டை – ஜாம்பியாவில் கண்டுபிடிப்பு..
5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் தனக்கு என்று ஒரு கட்டமைப்பை உருவாக்க மரத்தை பயன்படுத்தி இருப்பதற்கான அதிகாரப்பூர்வமான சான்றுகளை தற்போது ஆய்வாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள்.
இந்த கண்டுபிடிப்பானது பழங்கால மனித வாழ்க்கை பற்றிய தொல் இயல் ஆய்வுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என கூறலாம்.
இதற்குக் காரணம் ஜாம்பியாவில் உள்ள ஆற்றங்கரையில் பண்டைய கால மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரக்கட்டைகள் அனைத்தும் கற்கால மனிதனின் தங்கும் இடங்களாக இருந்திருக்கலாம் என்ற கருத்தை நேச்சர் ஆய்வுகள் வெளியிட்டுள்ளது.
பழங்காலத்தில் மனிதர்கள் மரத்தை எப்படி பயன்படுத்தி இருப்பார்கள் என்பதை லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி தலைமையிலான குழு ஆய்வு செய்து பார்க்கக் கூடிய வேளையில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்ததாக இதுவரை நம்பப்பட்டு வந்த பண்டைய கால மனிதர்கள் மரத்தில் இருந்து புதிய மற்றும் பெரிய பொருளை உருவாக்கி இருக்கிறார்கள், என்ற கருத்து பலரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.
மேலும் இந்த ஆய்வில் மரக் குச்சிகள் மற்றும் பழங்கால மரப் பொருட்களை கண்டறிந்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் அவை ஒன்றுக்கொன்று செங்குத்தான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மரக்கட்டைகள் வியப்பின் உச்சத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று விட்டது.
எனக்கு காரணம் இந்த மரக்கட்டைகளில் உள்ள வெட்டுக்கள் கல்லால் ஆன கருவியால் கொண்டு உண்டாக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிந்துள்ளது. இரண்டு மரக்கட்டைகளை ஒன்றோடு ஒன்று பொருத்த இவ்வாறு செய்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு சிறு மரக் கட்டைகளும் சுமார் 1.5 m அளவில் ஒன்றோடு மற்றொன்று பொருந்தி உள்ளது. இதனால் இது ஒரு குடிசை அல்லது நிரந்தர வசிப்பிடமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அது அவர்கள் தங்கக்கூடிய இடத்தின் தளத்தின் மேல் பகுதியில் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் ஆற்றங்கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதற்கு ஏதுவாக இதனை செய்திருக்கலாம் என்று பேராசிரியர் டல்லர் கூறுகிறார். மேலும் ஜாம்பியா ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட மரக்கட்டைகள் ஹோமோ சேபியன் காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாமா என்று தெரியாது, என்றும் அந்தக் காலத்திய புதை படிவங்களை இன்னும் கண்டறியவில்லை என்றும் பேராசிரியர் கூறினார்.