சக்தி வாய்ந்த நாடுகளில் வரிசையில் இந்தியாவின் இடம் என்ன? – அடடா.. இந்த நாட்டுக்காக முதலிடம்..
உலகில் இருக்கும் அனைத்து நாடுகளையும் கட்டி ஆளக்கூடிய திறன் இருக்கக் கூடிய நாடுகளை சக்தி வாய்ந்த நாடுகள் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் வல்லரசு நாடு என்று கூறுவார்கள்.
இதற்கு காரணம் அந்த நாட்டின் அரசியல் செல்வாக்கு, பொருளாதார வளம், ராணுவ வலிமை போன்றவற்றை கொண்டு தான் சக்தி வாய்ந்த நாடுகளின் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன என்று அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
மேலும் உலகிலேயே சக்தி வாய்ந்த நாடுகளின் தரவரிசையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியவை மிக அதிக அளவு ஆதிக்கம் செலுத்துவதோடும் மட்டுமல்லாமல் அவற்றின் நிலையை தக்க வைத்துள்ளது என கூறலாம்.
சக்தி வாய்ந்த நாடுகளை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளாக அந்த நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதாரம், அணு ஆயுதங்கள் உலகளாவிய கூட்டணிகள் அதிகாரம் போன்றவை முக்கிய பண்பு வகிப்பதாக கூறியிருக்கிறார்கள்.
இதன் இடத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சக்தி வாய்ந்த நாடுகளில் வரிசையில் முதல் இடத்தை அமெரிக்கா தட்டிச் சென்றுள்ளது. உலக அளவில் அமெரிக்காவில் இருக்கும் தொழில்நுட்பம் எண்ணெய் வளம் இயற்கை எரிவாயுவின் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பதால் தான் அமெரிக்காவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது என கூறலாம்.
இரண்டாம் இடத்தில் சீனா உள்ளது. சீனாவின் பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. மேலும் அணு ஆயுதங்களையும் கைவசம் வைத்திருக்கக் கூடிய சீனாவிற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பு நாடாக இருப்பதால் இந்த இடம் கிடைத்துள்ளது என கூறலாம்.
அமெரிக்காவைப் போலவே எண்ணெய் வளம், இயற்கை எரிவாயு உற்பத்தி, விவசாயம், மீன்பிடித்தல் போன்றவற்றில் ஸ்திரத்தன்மையோடு இருக்கும் ரஷ்யா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. பல நாடுகளுக்கு அணு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யக்கூடிய நாடாக இது உள்ளது.
இதனை அடுத்து உள்ள இடங்களை ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பிடித்துள்ளது. மேலும் இங்கிலாந்து, தென்கொரியா, பிரான்சு, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு அடுத்தடுத்த இடங்கள் கிடைத்துள்ளது. இந்த நாடுகள் அனைத்தும் பொருளாதாரம், ராணுவம், ஏற்றுமதி, அண்டை நாடுகளில் உள்ள உறவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த இடம் கிடைத்துள்ளது.
இதில் நமது பாரத திருநாட்டிற்கு 12 வது இடம் கிடைத்து வருகிறது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மட்டுமல்லாமல் உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தகவல் தொழில்நுட்பம், கார்ப்பரேட் அவுட் சோர்சிங், மென்பொருள் ஏற்றுமதி, இராணுவம் போன்றவற்றினால் உலக அளவில் ஒரு செல்வாக்கை அடைந்து இந்த இடத்தை பெற்றுள்ளது.
இனி வருங்காலத்தில் பன்னிரண்டாம் இடத்தில் இருந்து இந்தியா மேலும் முன்னேறி செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. வருங்காலத்தில் வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா வரும் என்பதில் எந்த அளவும் ஐயமில்லை.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.