சரியா முடி வெட்டாததுக்கு 2 கோடி அபராதமா !!!
பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்காதவாது வியாபாரம் செய்பவர்களுக்கு நுகர்வோர் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஒழுங்காக முடி வெட்டாததால் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
இந்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. ஆஷ்னா ராய் என்பவர் மாடலாக வேலை செய்து வருகிறார். தலை முடி சம்பந்தப்பட்ட பொருட்களின் விளம்பரங்களுக்கு இவர் மாடலாக நடிப்பது வழக்கம்.
இவருக்கு இவர் கூறிய படி தலை முடியை வெட்டாததால் தனது தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை தான் சந்தித்துள்ளதாக நுகர்வோர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு தான் ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிபவர் செய்த இந்தத் தவறு தன்னை மிகவும் பாதித்துள்ளது என கூறி வழக்கு தொடர்ந்த இவருக்கு ஜாக்பாட் அடித்தது போன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்களது வாடிக்கையாளரை ஒழுங்காக கவனிக்கவும், அவருக்கு தேவையான சேவையை சிறந்த முறையில் வழங்க தவறியதற்காகவும் நஷ்ட ஈடாக 2 கோடி ரூபாயை ஆஷ்னாவுக்கு அந்த நட்சத்திர விடுதி வழங்குமாறு நடுவர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த தீர்ப்பு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கோடி ரூபாயை எட்டு வாரங்களுக்குள் ஆஷ்னாவுக்கு கொடுக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு நிறுவனமும் தங்களது வாடிக்கையாளரை ஒருபோதும் எளிதாக எண்ணி அவர்களுக்கு தேவையான சேவையை கொடுக்க தவறக்கூடாது என்பதை இச்சம்பவம் ஆழமாக உணர்த்துகிறது.
இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.