ஒருவரின் சிறுநீரகத்தில் இத்தனை கற்களா !!!
ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள் 50 வயதான நோயாளி ஒருவரிடமிருந்து 156 சிறுநீரக கற்களை அகற்றியதாக அறிவித்துள்ளனர். பெரிய அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக லேப்ரோஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி முறைகளை பயன்படுத்தி இத்தனை கற்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இந்த முறைகளைப் பயன்படுத்தி ஒரு நோயாளியிடம் இருந்து அதிக எண்ணிக்கையிலான கற்கள் அகற்றப்படுவது இதுவே முதல் முறை. இந்த சிகிச்சையை செய்து முடிக்க மருத்துவர்களுக்கு மூன்று மணி நேரம் தேவைப்பட்டது.
கற்களை அகற்றிய பின்னர் நோயாளி ஆரோக்கியமாக இருப்பதாகவும் தனது வழக்கமான வழக்கத்திற்கு திரும்பியதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். நோயாளி பசவராஜ் மாடிவாளார் ஒரு பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரது வயிற்றின் அருகே திடீரென வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது சிறுநீரகத்தில் கற்கள் பெரிய கொத்தாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். சிறுநீர்ப்பாதையில் இருப்பதற்கு பதிலாக வயிற்றுக்கு அருகாமையில் அது அமைந்திருப்பதால் நோயாளிக்கு கற்களை அகற்றுவது சற்று கடினமான சவாலாகவே மருத்துவர்களுக்கு இருந்தது.
இந்தக் கற்கள் குறைந்தது இரண்டு வருடமாவது நோயாளியின் வயிற்றுப் பகுதியில் இருந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் கணிக்கின்றனர். ஒருவேளை அவருக்கு தற்போது வயிற்றுவலி வராமல் இருந்திருந்தால் வருங்காலத்தில் அந்த கற்கள் மேலும் அதிகரித்து பெரிய பிரச்சனையை உண்டாக்கி இருக்கும் என அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சந்திரா கூறியுள்ளார்.
- அமேசான் நதி வறட்சி: உலகின் நுரையீரல் அழிந்துவிடுமா? பூமியின் எதிர்காலம் கேள்விக்குறி!
- சதுர வடிவ விண்கல்: ஹோபா எரிக்கல்லின் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல்!
- வாழ்க்கையின் கசப்பான உண்மைகள் – ஒரு சிங்கத்தின் கடைசி பாடம்
- தன்னம்பிக்கையே வெற்றியின் முதல் படி!
- பெருமிதத்துடன் பதிலளித்த ஆபிரகாம் லிங்கன்
அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட 156 கற்களையும் “156” என்ற எண்-ஐ போலவே அடுக்கி வைத்து மருத்துவர்கள் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். நோயாளியின் உடலில் இருந்து அகற்றப்பட்ட 156 கற்களை கீழே உள்ள புகைப்படத்தில் காணுங்கள்.
நமக்கு வயிற்று வலி ஏற்படும் போது மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம் என்பதை இந்த செய்தி நமக்கு உணர்த்துகிறது.
இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.