• December 3, 2024

10 லட்சம் கொசுக்கள் நம்மை கடித்தால் என்ன ஆகும் ?

 10 லட்சம் கொசுக்கள் நம்மை கடித்தால் என்ன ஆகும் ?

இந்த உலகில் பெரிய பெரிய சவால்களை எல்லாம் நாம் எதிர்கொண்டாலும் கொசுக்கடி எனும் சவாலை எதிர் கொள்வது மிகக் கடினமான விஷயமே. அப்படிப்பட்ட கொசுக்கடியைப் பற்றிய பதிவுதான் இது.

Mosquito - Wikipedia

பொதுவாக பெண் கொசுக்கள் தான் மனிதர்களை கடிக்கும். முட்டை இடுவதற்கு முன் ரத்தத்தைக் குடிக்கும் பழக்கம் கொசுக்களுக்கு உண்டு. கொசுக்கள் பெரும்பாலும் எல்லா மனிதர்களையும் கடிப்பதில்லை.

பெண்களைவிட ஆண்களையே கொசு அதிகம் கடிக்கிறது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொசுக்களுக்கு கர்ப்பிணி பெண்களின் ரத்தமும், எடை அதிகமாக உள்ள மனிதர்களின் ரத்தமும் மிகவும் பிடிக்குமாம். நம் உடம்பில் உள்ள பாதி ரத்தத்தை குடிக்க 90000 காட்டுக் கொசுக்கள் படையெடுத்து நம்மை கடிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஒருவேளை 10 லட்சம் கொசுக்கள் ஒரே நேரத்தில் நம்மை கடித்தால் நம் உடம்பில் ஓடும் 5 1/2 லிட்டர் ரத்தமும் கொசுக்களால் உறிஞ்சி எடுக்கப்படும். நம் உடலில் உள்ள ஒவ்வொரு சதுர சென்டி மீட்டர் இடைவெளியும் 62 முறை கொசுக்களால் தாக்கப்படுமாம்.

இவ்வாறு நடக்கும் பட்சத்தில் ரத்தம் ஏதும் இல்லாத வெறும் சதை மட்டுமே உள்ள மனிதனாக நாம் மாறிவிடுவோம்.

Mutant Mosquitoes in the Keys? | Earth First! Newswire

” கடுகு சிறுசு என்றாலும் காரணம் கடுசு” எனக் கூறுவதுபோல் ஒரு சிறிய கொசு அதன் கூட்டத்துடன் சேர்ந்து நம்மை கொடூரமாக கடிக்கும் பட்சத்தில் அதனிடம் இருந்து தப்பிப்பது மனிதனுக்கு அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது.

மனிதர்களுக்கு கொசுவை கொண்டு பல நோய்கள் ஏற்பட்டு வரும் சூழலில் அதனிடமிருந்து தப்பிக்க சுத்தமான சுகாதாரமான வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற வேண்டும்.

இது போன்ற பதிவுகளுக்கு Deep Talks தமிழுடன் இணைந்து இருங்கள் !