• November 21, 2024

“பழைய பன்னீர்செல்வமா” மீண்டு வரணும்

 “பழைய பன்னீர்செல்வமா” மீண்டு வரணும்

கருப்பு நிறம், சராசரியான உயரம், உடற்பயிற்சியெல்லாம் செய்யாத மாதிரியான ஒரு உருவம் தான் தமிழ்சினிமாவுல கிட்டத்தட்ட ஒரு 25 வருசம் ராஜா. 40 வருச சினிமா வாழ்க்கை. 150+ தமிழ்படங்கள்.

இப்போ இருக்குற நடிகர்லாம் ஒரு போலீஸ்படம் நடிக்குறதுக்கே உயிர்போகுது. மனுசனோட சினிமாவாழ்க்கையில கிட்டதட்ட 20 மேற்பட்ட போலீஸ் படங்கள். சாட்சி, ஊமைவிழிகள், சிறைபறவை, ராஜநடை, புலன் விசாரணை, சத்ரியன், மாநகர காவல், சேதுபதி IPS, ஆனஸ்ட்ராஜ், வல்லரசு, வாஞ்சிநாதன், போன்ற இந்த மாதிரியான படங்களை விஜயகாந்த தவிர வேற யாரால பண்ணமுடியும்.

போலீஸ் படங்களை தவிர்த்து ரமணா, சின்னகவுண்டர், ஏழைஜாதி, செந்தூரப்பூவே, அம்மன் கோயில் கிழக்காலே, எங்கள் அண்ணா, வைதேகி காத்திருந்தாள், நானே ராஜா நானே மந்திரி, தமிழ்செல்வன், வானத்தைபோல மாதிரியான பல படங்கள் Action, காமெடி, Sentiment-னு எல்லா Category-லையும் மெரட்டி இருப்பாரு.

தமிழ்சினிமாவுல சிவாஜிகணேசனுக்கு “வெண்கலகுரலோன்’ அப்படினு ஒரு பேர் இருக்கு. சிவாஜியோட குரல்ல அந்த அந்த கம்பீரம் இருக்கும். அதுக்கு அடுத்து அது விஜயகாந்த்கிட்ட மட்டும் தான் இருந்தது. அப்படி ஒரு கம்பீரமான ஒரு குரல். அடுத்து முக்கியமான ஒன்னுனா அது சண்டை. தமிழ்சினிமாவுல சண்டைகாட்சிகள்-னா அது விஜயகாந்த் படசண்டைகள் தான். அதற்காகவே ஒரு கூட்டம் இருக்கு அத பார்க்க.

மற்ற நடிகரோட படம் வந்து சரியா போகமா நஷ்டம் ஆச்சுனா, அடுத்து விஜயகாந்த் படம் திரையிட்டு போன, படத்துல ஆன நஷ்டத்த இந்த படத்துல எடுக்கலாம்-னு அப்போ கோடம்பாக்கம் ஏரியாவே சொல்லும். இப்படியா இருந்த மனுசன அரசியலும் அவரோட உடல்நிலையும் மொத்தமா திருப்பிடிச்சி. சினிமா மாதிரியே அரசியலிலும் ஜெயிப்பார்-னு நினைக்கும்போது, அழகா அவரா ஜோக்கர் மாதிரி Portrait பண்ணி ஓரங்கட்டிட்டாங்க.

அந்த மாதிரியான குரல்வளம், தோரணை, Action பார்த்துட்டு, போன வருஷம் அவரோடபிறந்தநாள் வீடியோல எழுந்து நின்ன உடனே கீழ விழுந்துட்டாரு, பேசவும் முடியல வடிவேலு சொன்ன மாதிரி ‘எப்படி இருந்த மனுஷன் எப்படி ஆயிட்டாருனு தோணுச்சி. இந்த நிலைமை மாறி, “பழைய பன்னீர்செல்வமா” நல்ல ஆரோக்கியமா மீண்டு வரணும்.

பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன் விஜயகாந்த்…


1 Comment

  • Superb

Comments are closed.