போர், கொலை, சர்வாதிகாரி, கொடுங்கோலன் போன்ற வார்த்தைகளை ஒரு உருவமாக சிந்தனை செய்தால் நம் நினைவுக்கு வரும் முதல் நபர் ஹிட்லர் தான். அந்த அளவிற்கு மக்கள் மனதில் ஒரு கொடூரனாக ஹிட்லர் பதிந்து விட்டார். உலகப்போரின் போது யூதர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய அத்து மீறுதல்களே இதற்கு காரணம். இதையும் தாண்டி ஹிட்லர் ஒரு நல்ல மனிதாகவும், நல்ல ஆட்சியாளராகவும் இருந்ததாக அறியப்படுகிறார். அவரது கொடுங்கோல் ஆட்சி ஹிட்லரின் சில நல்ல செயல்களை மறக்கடித்து விட்டது. […]Read More
சென்னையில் இன்று பெய்த கன மழையால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்தும் மரங்கள் கீழே விழுந்தும் சேதமாயின. இந்நிலையில் சுயநினைவற்று கிடந்த ஒரு மனிதரை தனது தோள்களில் தூக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது. சத்திரம் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, யாரோ ஒருவர் இறந்து கிடப்பதாக தனக்கு கிடைத்த செய்தியை கேட்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே போனவுடன் அந்த மனிதருக்கு உயிர் இருப்பது […]Read More
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று வடதமிழகத்தில் கரையை கடந்தது. இதன் விளைவாக சென்னையிலும் தமிழகத்தின் மற்றும் பல மாவட்டங்களிலும் அதி கனமழை அடித்து ஊற்றியது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும் வீதிகளிலும் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தும் சேதமானது. இந்நிலையில் இந்த சேதத்திற்கு காரணமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரண்டு மணி நேரத்தில் கரையை கடந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது […]Read More
மனிதன் நிலவுக்குப் போகிறான். செவ்வாய் கிரகத்துக்குக் கூட போகப்போகிறான். இப்படி பூமியை விட்டு பல லட்சம், பல கோடி கி.மீ. தொலைவில் உள்ள கிரகங்களுக்கே செல்லபோகும் மனிதானால் பூமியில் உள்ள ஒரு இடத்துக்கு மட்டும் போகவே முடியாது. அப்படியே போனாலும் அங்கிருக்கும் நிலத்தில் காலடி வைக்க முடியாது. வைத்தால் கால் இருக்காது.! அந்த இடத்தின் பெயர் ‘மரியானா ட்ரென்ச்‘. இதனை ‘சேலஞ்சர் டீப்‘ (challenger deep) என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு கடல் பகுதி. உலகின் மிக […]Read More
இந்தோனேசியாவின் வெஸ்ட் ஜாவா எனும் பகுதியில் நவம்பர் 1ஆம் தேதி குறிப்பிட்ட காரில் மட்டும் மழை பெய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த அதிசய வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு என்பதை செய்திகளில் நாம் கேட்டிருப்போம், ஆனால் குறிப்பிட்ட காரில் மட்டும் மழை பெய்கிறது என்ற செய்தி நம்மை சற்று வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த வீடியோவை ஓரியான்ரியானா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் […]Read More
இந்தியாவில் மாடுகளை வைத்து ஜக்கம்மா குறி சொல்கிறாள் எனக்கூறி காணிக்கை வாங்கி செல்லும் மாட்டுக்காரர்கள் இருப்பது வழக்கமே. ஆனால் இவ்வாறு காணிக்கை வாங்குவதற்கு UPI payment முறையை பயன்படுத்திய ஒரு நவீன கால மாட்டுக்காரரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் நாடெங்கும் உள்ள சிறு சிறு கிராமங்களில் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கையில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவரும் தங்களது மொபைல் நம்பர் உடன் வங்கிக் கணக்கை இணைத்து UPI […]Read More
சமீப காலங்களில் விலங்குகள் செய்யும் குறும்புத்தனமான சம்பவங்கள் அடங்கிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு சுட்டித்தனமான குரங்கு செய்த குறும்புத்தனம் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ருப்பின் ஷர்மா எனும் ஐ.பி.எஸ் அதிகாரி இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் ஒருவரிடமிருந்து குரங்கு கண்ணாடியை பறித்துக்கொண்டு ஒரு கூண்டிற்கு மேல் அமர்ந்துகொண்டது. அந்த கண்ணாடியை வைத்து விளையாடிக் […]Read More
கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் அவர்கள் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும் அவரது உயிருக்கு உயிரான ரசிகர்களுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவரது மறைவுக்குப் பின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்களது இரங்கல் செய்தியை வெளியிட்டனர். அவரது ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்றே சொல்லலாம். புனித் ராஜ்குமாரின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, பிரபுதேவா, யாஷ் போன்ற […]Read More
திரைத் துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 61வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கொடுக்கப்பட்டது. இந்த விருது ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டபோதே திரைத்துறையை சேர்ந்த பலரும் அவரது ரசிகர்களும் சூப்பர்ஸ்டாருக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அவர் விருது பெறும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விருது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் விருதை […]Read More
இன்றைய சமூக வலைதளங்களானது குறிப்பிட்ட வசீகரத்தை கொண்ட நாய்களின் வீடியோக்களால் நிரம்பியுள்ளது. செல்லப் பிராணிகளின் முட்டாள் தனமான குறும்புகள் அடங்கிய வீடியோ பதிவுகள் இணையங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனக்கு முன்னால் நீளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை தட்டி விடாமல் அழகாக கடந்து வந்த ஒரு நாயின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. கோல்டன் ரெட்ரீவர் என சொல்லப்படும் ஒரு குறிப்பிட்ட […]Read More