ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள் 50 வயதான நோயாளி ஒருவரிடமிருந்து 156 சிறுநீரக கற்களை அகற்றியதாக அறிவித்துள்ளனர். பெரிய அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக லேப்ரோஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி முறைகளை பயன்படுத்தி இத்தனை கற்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த முறைகளைப் பயன்படுத்தி ஒரு நோயாளியிடம் இருந்து அதிக எண்ணிக்கையிலான கற்கள் அகற்றப்படுவது இதுவே முதல் முறை. இந்த சிகிச்சையை செய்து முடிக்க மருத்துவர்களுக்கு மூன்று மணி நேரம் தேவைப்பட்டது. கற்களை அகற்றிய பின்னர் நோயாளி […]Read More
நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வீட்டில் வளர்க்க தடை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என ஈரான் அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. இது அந்த நாட்டில் வசிக்கும் செல்லப்பிராணிகளின் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பன்றிகளை போல நாய், பூனைகளும் அசுத்தமானவை என ஈரான் அரசு கருதுவதே இந்த சட்டம் நிறைவேற்றுவதற்கான காரணம் என விமர்சனங்கள் எழுகின்றன. 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் கையெழுத்துடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]Read More
கொரோனா வைரஸ்-ன் புதிய பரிமானமான ஓமிக்ரான் வைரஸ் தமிழகத்திற்குள்ளும் நுழைந்துவிட்டது. நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய 47 வயதான சென்னை நபர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு ஓமிக்ரான் தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸுக்கான முதல் பதிவு இதுவே என சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக டிசம்பர் 10ஆம் தேதி வந்த பயணிக்கு கோவிட் சோதனை செய்யப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆறு பேருக்கும் சோதனை செய்யப்பட்டது. […]Read More
எமிரேட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான், 100% காகிதம் இல்லாத உலகின் முதல் அரசாங்கமாக துபாய் அரசு மாறியுள்ளது என அறிவித்துள்ளார். ஒட்டுமொத்த துபாயும் இனி டிஜிட்டல் துபாயாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் வருடத்திற்கு 1.3 பில்லியன் திர்ஹாம் அரசாங்கத்திற்கு சேமிக்கப்படும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 2650 கோடி ரூபாய் அரசுக்கு சேமிப்பாக இருக்குமாம். துபாய் முழுமையாக டிஜிட்டல் மயமானதற்கு உலக நாடுகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். துபாய் அரசாங்கத்திற்கு […]Read More
சமீபத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை பிபின் ராவத்தை நாடு இழந்தது. இந்நிலையில் இறந்துபோன விங் கமாண்டர் பிரித்திவி சிங் சவுகானின் 12 வயது மகள் ஆரத்யா தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்திய விமானப்படையில் பைலட்டாக மாற விரும்புவதாக கூறியுள்ளார். விங் கமாண்டர் சவுகானின் மகள் ஆரத்யா அவரது தம்பியுடன் சேர்ந்து தாஜ்கஞ்ச் சுடுகாட்டில் […]Read More
வெங்காயத்தை விளைய வைத்து அதற்கான பொருட்செலவு கூட லாபமாக கிடைக்காததால் ஆந்திர மாநிலம் கர்னூல் வேளாண் சந்தையில் ஒரு வெங்காய விவசாயி விளைந்த வெங்காயங்களை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இச்சம்பவம் கேள்விப்படுவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சமீபத்தில் பெய்த கன மழையால் ஆந்திர மாநிலத்தில் வெங்காயம் ஒழுங்கான முறையில் விளையவில்லை. குறைவான தரத்தில் அதிக வெங்காயங்கள் சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் அதன் விலை மிகவும் சரிந்துள்ளது. கர்னூல் வேளாண்மை சந்தையில் வெங்காயத்தின் விலை குவிண்டால் ரூபாய் 400 ஆக […]Read More
உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி என ஒவ்வொரு தமிழரும் கர்வத்துடன் சொல்கிறோம். தமிழ் மொழியில் பேசப்படும் சில வார்த்தைகள் கொரியன் மொழியிலும் பேசப்படுகிறது என்று சொன்னால், அது நம்பும்படியாக இருக்கிறதா???… ஆம் கொரியன் மொழிகளில் சில வார்த்தைகள் தமிழ் மொழியின் வார்த்தைகளை போலவே இருப்பதுடன், ஒரே அர்த்தத்தையும் கொடுக்கிறது. இந்த இரு மொழிகளுக்கும் இணையான வார்த்தைகளை மொழியியல் வல்லுனர்கள் திராவிட கொரியன் மொழிகள் என குறிப்பிடுகின்றனர். திராவிட மொழிகளுக்கும் கொரியன் மொழிக்கும் இருக்கும் தொடர்பை மையப்படுத்தி […]Read More
கொரோனா வைரஸின் புதிய பரிமாணமான ஓமிக்ரான் வகை கொரோனா மும்பை மாநகரில் அதிகம் பரவும் காரணத்தினால் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு நகர் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுகளில் மக்கள் அதிகம் வெளியே நடமாட வாய்ப்புள்ள காரணத்தினால் இந்த 144 தடையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் ஆனது, இதற்கு முன்பு வந்த கொரோனா மற்றும் டெல்டா வகை கொரோனாவை விட பல மடங்கு வீரியம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற […]Read More
ஒரு மணி நேரத்திற்கு 1600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும் பூமி திடீரென ஒரு ஐந்து வினாடிகளுக்கு சுற்றுவதை நிறுத்தி விட்டால் என்னவாகும் என கற்பனை செய்து இருக்கிறீர்களா. ஒரு வேளை உலகம் சுழல்வது ஐந்து வினாடிகள் நின்று விட்டால் என்னவெல்லாம் ஆகும் என்பதை பற்றிய பதிவுதான் இது. இந்த உலகமானது அண்டத்திற்கு வெளியே ஏற்பட்ட பல்வேறு மூலப்பொருட்களின் மோதலால் சுழற தொடங்கியது. ஒரு நாளைக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் இந்த பூமி பல்வேறு உயிரினங்களின் […]Read More
மது அருந்தி விட்டால் ஒரு மனிதன் தடுமாற்றம் இல்லாமல் நிலையாக இருப்பது கடினம். மதுவை அருந்தியவுடன் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு தான் இது. முதலில் மதுவை அருந்திய பின் அது சாதாரண குளிர்பானங்களை போலவோ, உணவுப்பொருட்களை போலவோ நமக்கு ஜீரணமாகாது. அதற்கு பதில் நாம் அருந்திய மதுவானது நமது ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். இப்படி ரத்த ஓட்டத்தில் கலக்கும் மது முதலில் நமது மூளையை சென்றடையும். […]Read More