• November 22, 2024

” உலகம் போற்றும் இசைஞானி இளையராஜா..!” –  பற்றிய சில சுவாரசிய தகவல்கள்…

 ” உலகம் போற்றும் இசைஞானி இளையராஜா..!” –  பற்றிய சில சுவாரசிய தகவல்கள்…

Ilaiyaraaja

உலகெங்கும் இருக்கும் இளைஞர்களின் மனதில் இளையராஜாவின் இன்னிசை தினம் தினம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவரின் இன்னிசை மழையில் நனையாதவர்களே இல்லை என்று கூறும் வகையில் ஒவ்வொருவரும் இவரது இசையை ரசித்த வண்ணம் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இசைஞானி இளையராஜா பற்றிய சுவாரசிய தகவல்களை நீண்ட கட்டுரையில் விரிவாக படித்த தெரிந்து கொள்ளலாம்.

Ilaiyaraaja
Ilaiyaraaja

இயற்பெயர் : ஞானதேசிகன் பிறந்த தேதி : 2.6.1943 தந்தை : டேனியல் ராமசாமி  தாய் : சின்னத்தாய்  சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா கல்வி : எட்டாம் வகுப்பு மனைவி : ஜீவா ( சொந்த சகோதரியின் மகள் ) குழந்தைகள் : கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி

சகோதரர்கள் : பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் (கங்கை அமரன்) இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். அவருக்கு 25 ஏக்கர் பரப்பு உள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது.

Ilaiyaraaja
Ilaiyaraaja

1958-ல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாததால் அம்மா சின்னத்தாய், இளையராஜாவை வேண்டுமானால் அழைத்துக் கொண்டு போ, இடையிடையே  ஒரு பாடலை அவன் பாடினால் உனக்குக் கொஞ்சம் ஓய்வாக இருக்குமே என்று கூறியிருக்கிறார். அன்னையின் திருவாக்கில்தான்  கலை வாழ்க்கை ஆரம்பமானது. அன்று பொன் மலையிலும், திருவெரும்பூரிலும் நடந்த அந்த இசை நிகழ்ச்சிகளில் என் பாட்டுக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததாக இளையராஜா அடிக்கடி நினைவு கூறுவார்.

ஹார்மோனியத்தை தலையில் சுமந்தபடி பாவலர் வரதராஜன் போன பாதையில் தென்னிந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்கு கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும், பயணம் செய்து வாசித்துப்பாடி மிக இளம் வயதிலேயே லட்சோப லட்சம் மக்களை சந்தித்து இசையின் நாடித்துடிப்பை அறிந்தவர்.

Ilaiyaraaja
Ilaiyaraaja

கம்யூனிஸ்ட் கட்சிப் பிராச்சார பாடகராக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இளையராஜா தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இன்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இவர்களது பாடல்கள் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு உதவியாய் இருந்ததை அன்போடு சொல்லிக் கொண்டிருக்கிரார்கள்.

ஆரம்ப காலங்களில் இளையராஜா பெண்குரலில் மட்டுமே பாடி வந்திருக்கிறார். வானுயுர்ந்த சோலையிலே.. நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு பாடுகின்றேன்.. என்று சொத்து பத்துக்களை நாடகம் போட்டு இழந்திருந்தாலும் லட்சியத்தை இழக்காத அண்ணனின் பாதையில் நடந்தது ஒரு பாடமாக மட்டுமில்லாமல் ஒரு தவமாக பரிணமித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் இளையராஜா.