“நுண்ணோக்கி இல்லாத காலம்..!”- கருவுறுதல் சிற்பங்கள் வரைந்த தமிழர்கள்..
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாசகத்துக்கு ஏற்ப தமிழனின் மருத்துவ அறிவியல் பிரமித்து வியக்க கூடிய வகையில் அமைந்துள்ளது என்று கூறலாம்.
எந்த ஒரு தொழில்நுட்பமும் வளர்ச்சி அடையாத காலத்திலேயே எல்லா வகை துறைகளிலும் மேம்பட்ட அறிவை கொண்டவர்களாக தமிழர்கள் விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு எண்ணற்ற சான்றுகளை பகிர முடியும்.
அந்த வகையில் தமிழனின் மருத்துவ அறிவை உற்று நோக்கும் போது உங்களுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம் ஏற்படும். இதற்குக் காரணம் பண்டைய தமிழர்கள் செதுக்கிய சிற்பங்களில் கருவுறுதல் பற்றிய சிற்பங்கள் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக சில கோயில் சிற்பங்களில் பெண்ணின் அண்டம் மற்றும் ஆணின் விந்தணு பெண்ணின் அண்டத்தை நோக்கி செல்வது போல வடித்திருக்கும் சிலைகளைப் பார்த்து ஆச்சரியம் அடைந்து விடலாம்.
எப்படி நுண்ணோக்கி கண்டுபிடிக்காத காலத்தில் ஒரு அண்டத்தின் வடிவமும் ஒரு விந்துவின் வடிவமும் இப்படித்தான் இருக்கும் என்று எதை வைத்து அவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று நம்மை ஆழ்ந்து யோசிக்க வைக்கும்.
ஆணின் விந்தணுவானது கருவை துளைக்கும் காட்சியை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கோயிலில் செதுக்கி வைத்திருக்கும், தமிழர்களின் இந்த சிற்பத்தை நீங்கள் சென்னையில் இருக்கும் வர மூர்த்தீஸ்வரர் திருக்கோயிலில் பார்க்க முடியும்.
அந்த வகையில் தமிழர்களின் மருத்துவ அறிவை எண்ணி வியக்கக்கூடிய நாம் பெண்களுக்கு நடக்கும் பிரசவத்தைப் பற்றியும் சிற்பங்களில் செதுக்கி வைத்து இருப்பதை பார்க்கும்போது மேலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்த கூடிய வகையில் அந்த ஒவ்வொரு சிற்பங்களும் உள்ளது என்று கூறலாம்.
இன்று வரை படுத்த நிலையில் பிரசவம் நடக்கும் என்று நாம் நினைத்திருக்கிறோம். ஆனால் அதை தகர்த்தெறியக்கூடிய வகையில் அன்று உள்ள காலகட்டத்தில் நின்றபடி பிரசவம் நடைபெற்று உள்ளதை விளக்கக்கூடிய சிற்பங்கள் தஞ்சை ஆ மாதவன் மற்றும் பல்வேறு வகை கல்வெட்டுகள் மூலம் உறுதியாகிறது.
மேற்கூறிய சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது எந்த முறையில் அவர்கள் இவற்றையெல்லாம் கண்டுபிடித்தார்கள் என்பது இன்று வரை தெரியாத ஒரு மர்மமாகவே உள்ளது. எனினும் அவர்களின் ஆழ்ந்த அறிவை நாம் பாராட்டி தான் ஆக வேண்டும்.