நாம் வாழும் உலகத்தில் பேய் இருக்கிறதா? இல்லையா? – உறைய வைக்கும் கருத்துக்கள்..
பேய் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே பலரும் மனதுக்குள் நடுநடுங்குவார்கள். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று ஒரு பழமொழி கூறுவார்கள். இரவில் மட்டும் தான் எந்த பேய்கள் சுற்றுமா அல்லது பகல் நேரத்திலும் சுற்றுமா என்று பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் உள்ளது.
அது மட்டுமல்லாமல் சிலருக்கு பேய் பிடித்து விட்டது என்று கூறுவார்கள். அந்த பேய் மனிதர்களை பிடிப்பது என்பது உண்மை நிகழ்வா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது இதுவரை கண்டறியப்படாத மர்மமாகவே உள்ளது.
இந்த பேய்கள் பொதுவாகவே இறந்து போனவரின் ஆவியாக இருக்கும். அந்த ஆவி உயிரோடு உள்ளவரின் உடலில் சேரும் நிகழ்வை தான் பேய் பிடித்தல் என்று கூறுகிறார்கள். பேய் பிடித்தவர்கள் இயல்புக்கு மாறாக பேசுவதும் அவர்கள் செயல்களை தாறுமாறாக செய்வதும் சில சமயங்களில் நிகழ்வதுண்டு.
இறந்தவர்களின் ஆத்மா திருப்தி இல்லாத சமயத்தில் இந்த உலகத்தை சுற்றி சுற்றி வரும் என்பது தொன்றுதொட்டு இருக்கும் நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல் இறந்தவர்களின் உடலில் இருந்து பிரிந்த உயிரானது 16 நாட்கள் அவர்கள் வீட்டைச் சுற்றியே சுற்றிய வண்ணம் இருக்குமாம்.
அடுத்ததாக அவர்கள் செய்த பாவ புண்ணிய கணக்குகளின் படி அந்த ஆத்மாவுக்கு உரிய இடம் கிடைக்கும் என்று புராணங்களில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. சூழ்நிலையில் அகால மரணம் அடைந்தவர்கள் அவர்கள் ஆயுள் காலம் முடியும் வரை இந்த பூமியில் சுற்றி வருவது உண்மை என்று சிலர் கூறுகிறார்கள்.
இதில் சில நல்ல ஆவிகளும், சில கெட்ட ஆவிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆன்மாக்களை அருமையாக வாழ வைக்க கூடியவன் இறைவன் என கூறலாம். அறிவு, திறன்கள், உணர்வு போன்றவை இருக்கும் என்று கூறுகிறார்கள்.
நமது மனநிலையோடு தொடர்புடைய ஆனது நம் மனநிலை பொறுத்தே தீர்மானிக்கப்படுவதாக பல அறிஞர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். எனவே மனிதன் அவனுடைய மனம் இவற்றுக்கு இடையே உள்ள புரிதலை நாம் உணர்ந்து கொள்வதின் மூலம் நமது தலைப்புக்கு உரிய விடை கிடைக்கும்.
பேய் இருக்கிறதா இல்லையா என்று பேசுவதற்கு பதிலாக அது இருந்தாலும் அவற்றை சமாளிக்க கூடிய திறனை நீங்கள் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இவை எல்லாமே நம் மனதில் ஏற்படுகின்ற விஷயங்களாக கூட இருக்கலாம்.
எனவே எண்ணம் போல் வாழ்வு இயன்ற சொற்றொடரை நினைவு கொண்டு நல்லதை நினைத்து வாழும் போது நமக்கு நன்மையே கிடைக்கும். எப்போதும் தைரியத்தை துணையாக கொண்டால் உங்கள் மனதில் ஏற்படும் தடுமாற்றங்களை நீங்கள் தடுத்து விடலாம் உங்களை மிஞ்சிய சக்தி வேறு என் எதுவும் இல்லை என்று நம்புங்கள்.