“தலையை துளைத்த தோட்டா.. உடன் வாழும் லயோலா இக்னேஷியஸ்..!” – மிரட்டும் மிராக்கிள்..
இந்திய வரலாற்றிலேயே மறக்க முடியாத நபர்களில் ஒருவராக இருக்கக்கூடிய வீரப்பனை பற்றி அதிகமாக பகிர வேண்டிய அவசியமே இல்லை. ஒரு சூப்பர் ஹீரோவை போல இவரை தேடிச் செல்வதும், பின், பிடிக்க முடியாமல் தடுமாறிய தமிழக அரசு போலீசார் பற்றியும் பல விதமான விமர்சனங்களை மக்கள் மட்டும் அல்லாமல் ஊடகங்களும் ஒவ்வொரு நாளும் வெளியிட்டு மக்களை எப்பொழுதும் திகிலாக வைத்திருந்தார்கள்.
அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியான ஓசூர் பகுதியில் வீரப்பனை பிடித்தே தீருவோம் என்ற நோக்கில் தமிழக அதிரடி படை கடுமையான யுக்திகளை போட்டு வீரப்பனை தேடி வந்தது.
அந்த வகையில் அன்றும் மாலை வீரப்பனின் கூட்டாளிகள் சிலர் ஓசூர் அருகே இருக்கக்கூடிய காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அதிரடிப்படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் வீரப்பனின் கூட்டாளிகள் போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்கள். இதில் ஒரு போலீஸ் அதிகாரி உயிர் இழக்க மற்றவர்கள் படு காயத்துடன் ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அந்த வகையில் துப்பாக்கி சூட்டில் தன்னுடைய பின் தலையில் தோட்டா துளைத்து இறந்து விட்டதாக கருதிய லயோலா இக்னேஷியஸ், மருத்துவமனையில் 3 நாட்கள் சுய நினைவு இல்லாமல் இருந்திருக்கிறார்.
மூன்று நாட்கள் கழித்து சுய உணர்வு வந்த பிறகு அவர் என்ன நடந்தது என்பதை நினைவு கூர்ந்து இருக்கிறார். மேலும் தலையில் அதிக வலி இருந்ததின் காரணத்தாலும் மண்டை ஓட்டை துளைத்த தோட்டா மூளைக்கு அருகே சென்று அந்த பகுதியில் தங்கி விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் அந்தத் தோட்டாவை எடுப்பதால் ஆபத்து என்று கருதி அவர்கள் தோட்டாவை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டார்கள். இந்த சூழ்நிலையில் மூளையில் எந்த பாதிப்பும் இல்லாமல் தோட்டா தலையில் இருப்பதை அனைவரும் வியப்போடு பார்த்திருக்கிறார்கள்.
இதுபோன்ற சமயங்களில் பிழைப்பது அரிது. எனினும் ஆண்டவனின் அருளால் நான் இன்றும் அந்தத் தோட்டாவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த தோட்டாவானது 1997 இல் நடந்த கமாண்டோ ஆப்பிரேஷன் போது பின்புற தலையை துளைத்து உள் மூளையின் பக்கத்தில் சென்று தங்கி விட்டது.
இதனை அடுத்து அதிரடி படையில் இருந்து என்னை நீக்கி விட்டார்கள். நான் விருப்பம் தெரிவித்தோம் அவர்கள் சூழ்நிலையை கருதி என்னை அந்த குழுவில் சேர்த்துக் கொள்ளவில்லை.