• November 21, 2024

“சந்திரயான் மூன்று அனுப்பிய நிலவின் மேற்பரப்பு படம்..!” –  அடி.. தூள்.. வேற லெவல்..

 “சந்திரயான் மூன்று அனுப்பிய நிலவின் மேற்பரப்பு படம்..!” –  அடி.. தூள்.. வேற லெவல்..

Chandrayaan-3

நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான் மூன்று விரைவில் இந்தியர்கள் நிலவில் வாழும் கனவை இன்னும் கூடுதல் ஆக்கிவிட்டது. அந்த வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் மூன்று விண்கலத்தின் உள் வட்ட பாதையில் ஒரு உந்து சக்தியை செலுத்தி சந்திரனை நெருங்க வைத்து விட்டார்கள்.

இப்போது நமது சந்திரயான் விண்கலம் நிலவுக்கு நான்காயிரத்தி முந்நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் சந்திரயான் மூன்று நிலவில் இறங்கி ஒரு நாள் முழுவதும் ஆய்வுப் பணியை மேற்கொள்ளவது தான் மிகப்பெரிய ஹைலைட்டாக கருதப்படுகிறது.

Chandrayaan-3
Chandrayaan-3

ஏற்கனவே நாம் அனுப்பிய சந்திரன் இரண்டு நிலவில் இறங்கி சேதம் அடைந்தது அனைவருக்கும் நினைவு இருக்கலாம். அந்த வகையில் தற்போது சந்திரயான் மூன்று திட்டம் சுமார் 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு உள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியா வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்கின்ற நான்காவது நாடாக உலகில் திகழ்வது இந்தியர் அனைவருக்கும் பெருமையான தருணங்கள் தான்.

Chandrayaan-3
Chandrayaan-3

அந்த வகையில் சந்திரயான் மூன்று கனவை நிறைவேற்றக்கூடிய வகையில் நிலவின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த கனவு திட்டமானது எந்த விதமான தடங்கல்கள் இல்லாமல் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.

சற்று முன்பு சந்திரன் மூன்று படம் பிடித்து அனுப்பிய நிலவின் மேற்பரப்பு படமானது தற்போது இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பார்க்கக்கூடிய புகைப்படமாக மாறி உள்ளது.

Chandrayaan-3
Chandrayaan-3

அதுமட்டுமல்லாமல் சந்திரன் மூன்று விண்கலத்தின் முன் நகர்வு நாளை பிற்பகல் ஒரு மணி முதல் 2 மணிக்குள் நடைபெறும், என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கருத்தை தெரிவித்துள்ள நிலையில் ஒருநாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு நிகராகும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சூழ்நிலையில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட இந்த விண்கலமானது ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட நிலையில் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்துள்ள சந்திரயான் மூன்று சந்திர ஈர்ப்பு விசையை உணர்வதாக முதல் தகவலை அனுப்பியது.

Chandrayaan-3
Chandrayaan-3

இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் மூன்று வெண்கலத்தின் லேண்டெர் கருவியை, சாப்ட் லேண்டிங் செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை லேண்டெர் உதவியோடு நிலவில் இறங்கி விட்டால், இஸ்ரோ விஞ்ஞானிகளின் கனவு மட்டும் அல்லாமல் இந்திய மக்களின் கனவும் விரைவில் நிறைவேறும் என்று கூறலாம்.