” காவி உடை சன்னியாசி..!” – உ.பி முதல்வர்.. யாரும் அறியாத கலக்கல் தகவல்கள்..
காவி உடையில் ஒரு முதல்வரா? என்று பலரும் பல வகைகளில் பேசி வரும் நிலையில் உ.பி முதல்வர் யோகி பற்றி அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகள் உள்ளது.
இந்த உண்மைகளை தெரிந்து கொண்டால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள். அவ்வளவு அருமையான கலக்கல் தகவல்களை தான் இந்தக் கட்டுரை உங்களுக்கு வழங்க உள்ளது.
பஞ்சூர் என்ற பின் தங்கிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் 1972ல் பிறந்த இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது.யோகி ஆதித்யநாத், அஜய் மோகன் பீஷ்ட் என்ற புனைப்பெயர் கொண்டவர். உத்திரபிரதேச வரலாற்றிலேயே ஹெச்என்பி (HNB) கர்வால் பல்கலைக்கழகத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்.
இந்த காவி சன்னியாசி யோகிஜி ஒரு கணித மாணவராக திகழ்ந்திருக்கிறார். மேலும் இளங்கலை பட்டத்தை கணிதத்தில் பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், இவர் தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவத்தில் இருந்த பழமையான கோர்க்கா படை பிரிவின் ஆன்மீக குருவாக இவர் செயல்பட்டு இருக்கிறார். மேலும் நேபாளத்தில் யோகிக்கு என்று மிகப்பெரிய ஆதரவாளர்கள் குழு இருப்பதோடு மட்டுமல்லாமல் யோகியை குரு பகவானாகவே அவர்கள் வழிபடுகிறார்கள்.
தற்காப்பு கலைகளில் சிறப்பான பயிற்சி பெற்றிருக்கும் முதல்வர் யோகி ஒரே நேரத்தில் நான்கு பேரை தோற்கடிக்க கூடிய அளவு திறமை கொண்டவர். அது மட்டுமா? உத்தரப்பிரதேசத்தின் புகழ்பெற்ற நீச்சல் வீரர், பல பெரிய ஆறுகளை கடந்து நீச்சல் விளையாட்டில் ஒரு சகாப்தம் படைத்தவர்.
மேலும் கணினிகளே தோற்றுப் போகும் அளவுக்கு கணக்கு போடுவதில் மிகச்சிறந்த நிபுணர். பிரபல கணித மேதை சகுந்தலா தேவியும் யோகியின் கணித திறனை பாராட்டி இருக்கிறார்.
தினமும் நான்கு மணி நேரம் மட்டுமே உறங்கும் இவர் யோகா, தியானம், கௌஷாலா, ஆரத்தி பூஜைகளை அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் எழுந்து செய்யக்கூடியவர்.
ஒவ்வொரு நாளும் சைவ உணவை மட்டும் உட்கொள்ளும் இவர் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே சாப்பிடுகிறார். இவர் உணவில் நாட்டு பசுவின் பால், கிழங்கு வகைகள், பழங்கள் போன்றவை அடங்கும்.
இதுவரை மருத்துவமனையின் பக்கம் தலை காட்டாத யோகி ஆதித்யநாத், ஆசியாவின் மிகச்சிறந்த வனவிலங்கு பயிற்சியாளர்களில் ஒருவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வனவிலங்குகளை நேசிக்கக் கூடிய தன்மை மிக்கவர்.
யோகியின் குடும்பம் எம்பி, முதல்வர் என பல படிகளில் இவர் முன்னேறி இருந்தாலும், அந்த குடும்பத்தின் நிலைமை அன்று எப்படி இருந்ததோ, அது போலவே இன்றும் உள்ளது என்பது தான் இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் எனக் கூறலாம்.
யோகி தனது அரசியல் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே ஓய்வு பெற்று தன் வீட்டுக்குச் சென்றுள்ளார். ஒரே ஒரு வங்கிக் கணக்கை வைத்திருக்கும் யோகியின் பெயரில் எந்த ஒரு நிலச் சொத்தும் மற்ற விதமான சொத்துக்களும் இல்லை என்பதுதான் படுஆச்சரியமான விஷயம்.
இன்னும் தன் சொந்த சம்பளத்தில் இருந்து தான் உணவு மற்றும் உடைகளுக்கான பணத்தை செலவதித்து மீதியுள்ள பணத்தை நிவாரண நிதியில் டெபாசிட் செய்துவிடும் இவரை போன்ற அரசியல்வாதிகள் நிச்சயம் நம் நாட்டுக்குத் தேவை என்று கூறலாம்.