• November 22, 2024

யார் இந்த அல்டினா ஷினாசி (Altina Schinasi) ? – இன்று கூகுளில் இவர்களுக்கு டூடுள்…

 யார் இந்த அல்டினா ஷினாசி (Altina Schinasi) ? – இன்று கூகுளில் இவர்களுக்கு டூடுள்…

Altina Schinasi

இன்று ஆகஸ்ட் 4, 2023 என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இன்றைய நாளில் தான் மேற்கூறிய பெண்மணிக்காக கூகுள் நிறுவனம் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுவும் இவருடைய 116 ஆவது பிறந்த நாளுக்காக இந்த சிறப்பான செயலை செய்துள்ளது.

இவர் அமெரிக்காவைச் சேர்ந்த சிற்பி,ஓவியர், திரைப்பட தயாரிப்பாளர், தொழிலதிபர் மற்றும் பன்முக திறமையை கொண்டவர். பெண்கள் விரும்பி அணியக்கூடிய கேட் – ஐ யை வடிவமைத்து தந்தவர்.

Altina Schinasi
Altina Schinasi

மேலும் இவர் ஏராளமான ஆவணப் படங்களையும், கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியவர். இவரின் புகழ்பெற்ற ஓவியர்களான சல்வடோர் டாலி, ஜார்ஜ் க்ரோஸ் இடம் பயிற்சி பெற்றவர்.

பெண்களின் கண்களில் வட்ட வடிவமான பிரேம்கள் மட்டும் இருந்த நிலையில் இவர் கேட் ஐ வடிவ பிரேமை உருவாக்கினார். இந்த பிரேம்கள் ஹெர்லிகுயின் பிரேம்கள் என்று அழைக்கப்படுகிறது.

Altina Schinasi
Altina Schinasi

ஆரம்ப காலத்தில் இவரது கண்டுபிடிப்புகளை பல முன்னணி நிறுவனங்கள் நிராகரித்த பிறகு ஒரு உள்ளூர் கடை அதை வாங்கி விற்பனை செய்தது. சில நாட்களிலேயே நியூயார்க் முழுவதும் பிரபலமடைந்த இந்த பிரேம் பின்நாளில் அமெரிக்காவின் ஃபேஷன் அடையாளமாக மாறிவிட்டது.

அல்டினா தனது கண்டுபிடிப்புக்காக 1939 ஆம் ஆண்டு லாட்டரி டிசைன் விருது பெற்றவர். இந்த வெற்றிக்கு பிறகு சில திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் இவர் தயாரித்த ஆவணப்படமானது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

Altina Schinasi
Altina Schinasi

1999 ஆம் ஆண்டு காலமான இவரைப் பற்றி 2014 ஆம் ஆண்டு ஆவணப்படம் ஒன்று வெளியானது. அவரின் பிறந்த நாளான இன்று கூகுள் நிறுவனம் இவருக்காக ஒரு சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இவரைப் பற்றி அறியாதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு இவரின் புகழை கூகுள் பிரபலப்படுத்தி விட்டது என கூறலாம்.

இன்றும் இவர் கண்டுபிடித்த கண்ணாடி பிரேம் பெண்களின் மத்தியில் விரும்பி அணியக்கூடிய ஒன்றாக உள்ளது. இதனை அடுத்து இந்த ஆளுமையை கூகுள் கொண்டாடும் விதத்தைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.