“சிறகு விரித்து பறக்கலாம்..!”- இந்த சூட்சுமத் தெரிந்தால்..
இந்த நிரந்தரம் இல்லாத உலகத்தில் மனிதராக பிறந்த நான் எதிலும் வெற்றி அடைய வேண்டும் என்ற உத்வேகத்தில் இருப்போம். அந்த உத்வேகத்தை நீங்கள் அடைவதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளது. அதற்கு முன் வாழ்க்கையில் நீங்கள் சில மனிதர்களை தரம் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் மூலம் உனக்கு நன்மை எது, தீமை எது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும். ஒரு விஷயம் முக்கியம் என கருதினால் அதை அடைய எப்படியும் ஒரு வழியை கண்டுபிடிப்பீர்கள்.
அதுவே முக்கியமில்லாத விஷயம் எனில் அதைப் பற்றி கவலைப்படாமல் எப்படி சமாளிக்கலாம், என்பதை பற்றி தான் உங்கள் எண்ணம் இருக்கும். அவர்களிலிருந்து நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எனவே கற்றதை கொண்டு தவறு செய்யாமல் உங்களால் இருக்க முடியும்.
அறிவுரையால் ஒருத்தரை திருத்த முயற்சி செய்வது என்பது அறியாமையின் உச்சகட்டம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மகிழ்வாக மனம் இருந்தால் மட்டுமே அது வெற்றியை நோக்கி அழைத்து செல்லும். எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
புயலின் வேகத்தை கணிக்க முடிந்த நம்மால் மனிதனின் அடுத்த நகர்வை கணிக்க முடியவில்லை. எனவே வெற்றி பெறுவதற்கு மிகவும் சிறந்த வழி என்பதை மற்றொரு முறை முயற்சி செய்வது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் எதையும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் நடையிட்டால் நிச்சயம் உங்களது வெற்றிகளை நோக்கி முன்னேறி செல்வீர்கள். அதுவும் நேர்மையான முறையில் முன்னேறிச் செல்லும் போது உலகம் உங்களுக்காக வழி விடும்.
தவறு செய்வது என்பது இயல்பான விஷயம்தான். எனினும் தவறு வரும் என்று நினைத்துக் கொண்டே செய்தால் கட்டாயம் தவறாக தான் அது வரும். எனவே உங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு செயல்படும் போது தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்காது.
தெரிந்திருந்தாலும் எதுவும் தெரியாதது போல் இருந்து விடுவதன் மூலம் உங்களுக்கு நன்மைதான் ஏற்படும். இந்த உலகில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அமைதியாக இருப்பதால்தான் இந்த உலகம் நல்ல முறையில் சுழல்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் நீங்கள் எந்த சிந்தனையோடு உங்கள் வாழ்க்கையை தொடங்குகிறீர்களோ அந்த சிந்தனைகள் தான் உங்களுக்குள் பிரதிபலிக்கும். எதைப்பற்றி நினைக்கிறோமோ அதைப்பற்றி தான் நம்மை அது ஈர்க்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
முடிந்தவரை நல்லதை சிந்தியுங்கள். ஒரு வேளை கடந்த காலம் உங்களுக்கு கடினமாக இருந்திருக்கலாம். அவற்றைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல் எதிர்காலம் சிறப்பாக அமையும், என்ற சிந்தனையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.