“போடுடா வெடிய..!”- செடி புட்டா சேலை, நாமக்கட்டி, மட்டி வாழைக்கு புவிசார் குறியீடு..
மத்திய அரசால் வழங்கப்படக் கூடிய புவிசார் குறியீடு பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இந்த புவிசார் குறியீடு பதிவு பாதுகாப்புச் சட்டமானது 1999 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ் நீங்கள் உணவுப் பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், இயற்கை பொருட்கள் என ஐந்து நிலைகளில் புவிசார் குறியீட்டை நீங்கள் பெறலாம்.
அந்த வகையில் ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருட்களுக்கு மத்திய அரசானது புவிசார் குறியீட்டை வழங்கியுள்ளது. இதில் குறிப்பாக மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு ,காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, பழனி பஞ்சாமிர்தம் போன்றவற்றை உதாரணமாக கூறலாம்.
அந்த வகையில் தற்போது செடி புட்டா சேலை, நாமக்கட்டி, மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதில் செடி புட்டா சேலை திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள வீரவநல்லூர் நகரத்தைச் சேர்ந்த நெசவாளார் நெய்யப்படும் புடவையாகும். இந்த புடவையானது வெப்பமான நாடுகளில் உள்ளவர்களுக்கு ஏற்றது இந்த புடவையை உடுத்தும் போது குளிர்ச்சியாக இருக்கும்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 300 ஆண்டுகளாக அந்த கிராமப்புறத்தில் இருக்கும் மக்கள் குடிசைத் தொழிலாக செய்து வரும் நாம கட்டிக்கும் புவிசார் குறியீடு கிடைத்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை எந்தவிதமான செயற்கை ரசாயனத்தை பயன்படுத்தி நாமக்கட்டிகளை இவர்கள் செய்வதில்லை. இவை முழுமையான விரல் வடிவ நீளம் கொண்ட களிமண் துண்டுகளாக உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக இதன் உற்பத்திக்கு இயந்திரங்களை பயன்படுத்தாமல் கைகளால் செய்வது இதன் சிறப்பு அம்சமாகும்.
குமரி மாவட்டத்தில் மருத்துவ குணம் உடைய மட்டி வாழைப்பழம் அதிகளவு கிடைக்கிறது. இந்த வாழைப்பழத்திற்கும் புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கி இருப்பதை அடுத்து மொத்தம் 58 பொருட்களுக்கு தமிழகத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மட்டி வாழைப்பழமானது தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்தை கொண்டுள்ளது.
குழந்தைகளுக்கு இந்த பழத்தை கொடுப்பதன் மூலம் ஆரோக்கியம் அதிகமாகும் எதிர்ப்பு சக்தி கிட்டும் எனக் கூறுகிறார்கள். மருத்துவ குணம் கொண்ட மட்டி வாழையில் பல வகைகள் உள்ளது. அவை முறையே மட்டி, செம்மட்டி, தென்மட்டி, மலை மட்டி என்பதாகும்.
அது மட்டுமல்லாமல் மேலும் 15 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் புவிசார் குறியீடு கிடைக்கும் பட்சத்தில் உலகளாவிய சந்தையில் இந்த பொருட்கள் அதிக அளவு வருமானத்தை ஏற்படுத்தி தரும் என்று நம்புகிறார்கள்.
உலக மக்களின் கவனத்தை ஈர்க்க வைக்க எந்த புவிசார் குறியீடு முக்கியமான ஒன்றாக செயல்படுகிறது.