பிரமிடுகள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த பிரமிடுகளில் எண்ணற்ற அமானுஷ்யங்கள் புதைந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இத்தகைய பிரமிடுகள் மூலம் என்ன பயன் என்பதை இதுவரை தெரியாமல் உள்ளது. அந்த வகையில் கிஸா பிரமிடு எகிப்தில் இருக்கக்கூடிய ஒருவகை பிரமிடு ஆகும். இந்தப் பிரமிடு 4500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்தில் இதுபோன்ற பிரமிடுகள் எப்படி கட்டப்பட்டது என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் பாலைவனத்தில் உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய பண்டைய இந்த கோடுகளை நாஸ்கா கோடுகள் என்று அழைக்கிறார்கள். இந்த கோட்டினை யார் போட்டார்கள். இதன் நோக்கம் என்ன என்று இதுவரை விஞ்ஞானிகள் அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு மர்மமான கோடுகளாக இவை விளங்குகிறது. மேலும் இவ்வளவு தொலைவு இந்த கோடுகளை எப்படி போட்டு இருப்பார்கள் என்று தெரியாமல் அனைவரும் தலையில் பிடித்துக் கொள்கிறார்கள் என்று கூறலாம்.
உலகின் முதல் அனலாக் கணினியாக கருதப்படக் கூடிய இந்த சிக்கலான கருவி பண்டைய கிரேக்க சாதனம் ஆகும். இந்த கருவியை எதற்கு ஏற்படுத்தினார்கள். இதனால் என்ன பயன் என்பது இன்றுவரை கணிக்க முடியாமல் உள்ளது. மேலும் இந்த கணினியை ஆன்டிகைதெரா (ANTIKYTHERA MECHANISM) பொறிமுறை என்று அழைக்கிறார்கள்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowஉடன்படிக்கை பேழை இந்த (THE ARC OF COVENANT) பேழையில் சுமார் பத்து கட்டளைகள் இருந்ததாக நம்பப்படுகிறது. இந்தப் பேழை தற்போது எங்கு உள்ளது என்று எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இது எங்காவது மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.
பாக்தாத் பேட்டரி (BAGHDAD BAATTERY) என்று அழைக்கப்படக்கூடிய இந்த பொருளை நன்றாக பாருங்கள். இது ஒரு களிமண் ஜாடி போல தெரியும். மேலும் இதில் ஒரு செம்பு சிலிண்டர் மற்றும் இரும்பு கம்பியை கொண்டுள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் பழமையான இந்த சாதனத்தின் பயன்பாடு என்ன என்பதை இன்றுவரை தெரியாத மர்மமாகவே உள்ளது.
Super