ஆபத்தான நாய்களின் வரிசையில் எத்தனை வகைகள் உள்ளதா? – மலைக்க வைக்கும் தகவல்கள்..
மனித இனம் தோன்றிய பிறகு ஏற்பட்ட நாகரிக வளர்ச்சிகளில் அவனுக்கு வேட்டையாட உறுதுணையாக இருந்த நாய்கள் மனித இனத்தின் மிகச்சிறந்த நண்பனாக உள்ளது என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
அப்படிப்பட்ட நாய்கள் இந்த உலகில் சுமார் 340 மேற்பட்ட வகைகள் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஒவ்வொரு இனத்தில் பிறக்கும் நாய்களுக்கு என்று தனித்திறன் இருப்பதோடு மட்டுமல்லாமல், சில நாய்களுக்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகமாகவும் சில நாய்களுக்கு வேகமாக ஓடக்கூடிய திறன் உடையதாகவும் விளங்கும்.
பொதுவாக நாய்களுக்கு கடிக்கக் கூடிய திறன் 250 PSI வரை இருக்கும். ஆனால் Dogi Argentino வகை நாய்களுக்கு கடிக்கக்கூடிய திறன் 500 PSI வரை உள்ளது. இந்த நாய்கள் பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும்.
உடலைப் பொறுத்தவரை மிக வலிமையான நாயாக இருக்கக்கூடிய இது 45 கிலோ வரை வளரக்கூடிய தன்மையோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் வேட்டையாடக்கூடிய திறனும் கூடுதலாக இருக்கும்.
ஆரம்ப காலத்தில் இந்த நாய்கள் பன்றிகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டது. மேலும் இந்த நாய்கள் பத்து முதல் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடிய தன்மை கொண்டது. சிகரங்களில் மிக எளிமையாக ஏறி சிங்கத்தைக் கூட வேட்டையாடும் திறன் இந்த நாய்களுக்கு உண்டாம்.
இதனை அடுத்து American Pit Bull Terrier நாய்களை எடுத்துக் கொள்ளலாம். இந்த நாய்கள் பார்ப்பதற்கு சற்று சிறிதாக காட்சி தந்தாலும், மிக வேகமாக ஓடும் திறனை கொண்டுள்ளதால் அனைவராலும் விரும்பப்படக்கூடிய நாய்களில் ஒன்றாக உள்ளது. இந்த நாய் என் கடிக்கும் திறன் குறைவாகவே உள்ளது. மேலும் பார்ப்பதற்கு சற்று பூஸ்டியான தேகத்தைக் கொண்டிருக்கும். ஆபத்தான நாய்களின் பட்டியலில் இந்த நாயும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் நாயானது Rottweiler. மிகவும் சுறுசுறுப்பான, அழகான நாயாக காட்சியளிக்கும் இதனுடைய கடிக்கும் திறன் 328 பி எஸ் ஐ ஆக உள்ளது.
பல வகையான நாய்கள் இருந்தாலும் மேற்கூறிய இந்த மூன்று வகையான நாய்கள் மிகவும் புத்தி கூர்மையோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் மனிதர்களோடு நெருங்கி பழகக் கூடிய சுபாவமும் உள்ளது.