“உலக மக்களை மிரள்சியில் ஆழ்த்தும் பரிணாமக் கொள்கை..! – தசாவதாரம்..
இந்த உலகத்தில் உயிர்கள் வாழ ஆதாரமாக நீர் இருந்தது என்றும், அந்த நீரில் இருந்து தான் பல வகையான உயிரினங்கள் தோன்றியது என்ற அறிவியல் உண்மை அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதை முதன் முதலில் கண்டுபிடித்துச் சொன்னவன் வெளிநாட்டுக்காரன் என்று நாம் நினைப்பது மிகவும் தவறான ஒன்று என்பதை சுட்டிக்காட்டத்தான் இந்த பதிவு.
பரிணாமக் கொள்கை மட்டுமல்ல, பல்வேறு விதமான கண்டுபிடிப்புகளின் சுரங்கமாக நமது முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பார்க்கும் போது தான், அதன் உண்மை என்ன என்பது உங்களுக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கும் புலனாகும்.
அந்த வகையில் இந்த அற்புதமான பரிணாமக் கொள்கையை தசாவதாரம் என்ற ஆன்மீக கதையின் மூலம் நம் முன்னோர்கள் நமக்கு பல நூறு ஆயிரம் ஆண்டுக்கு முன்பே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த தசாவதாரத்தில் முதலாவதாக தோன்று இருக்கக்கூடிய அவதாரம் மச்சவதாரம், இதில் மச்சம் என்பது மீனைக் குறிக்கும். எனவே முதன் முதலில் நீரில் தான் உயிரினங்கள் தோன்றியது என்பதை குறிப்பாக உணர்த்தத்தான் இந்த மச்ச அவதாரத்தை முதல் அவதாரமாக கூறியிருக்கிறார்கள்.
இதனை அடுத்து வரக்கூடிய அவதாரங்களில் படிப்படியாக வளர்ச்சி காணப்படும். இதை நாம் பரிணாம வளர்ச்சி என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரத்தை இதற்கு உதாரணங்களாக நாம் கூறலாம்.
மேலும் நரசிம்ம அவதாரத்தில் சிம்ம உருவத்தில் காட்சியளிக்க கூடிய மனித இனமானது, அடுத்த அவதாரமான வாமன அவதாரத்தில் குட்டையான தோற்றத்தில் அவதரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பரசுராம அவதாரம், ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் என அதனுடைய பரிணாம வளர்ச்சி மிகச் சிறப்பான முறையில் நடந்ததன் காரணத்தினால் கிட்டத்தட்ட மனிதன் எப்படி உருவத்திலும், அறிவிலும் இருக்கிறானோ அதுபோலவே இந்த தசாவதாரத்தின் கடைசி படிநிலைகள் உள்ளது என்று கூறலாம்.
கடைசி அவதாரமாக சொல்லப்படுகின்ற கல்கி அவதாரத்தில் குதிரை வாகனத்தோடு காட்சியளித்திருக்கிறார், கல்கி பகவான். இந்த கலி யுகம் முடியக்கூடிய தருவாயில் பூமியானது முற்றுப்பெறும் என்ற நம்பிக்கை இன்று வரை நிலவி வருகிறது.
இப்போது சொல்லுங்கள் யார் புத்திசாலி என்று பல ஆண்டுகளுக்கு முன்பே பரிணாமக் கொள்கையை தசாவதாரத்தின் மூலம் விளக்கிய நம் முன்னோர்களின் புத்தியை மெச்ச வேண்டாமா…
இதை விடுத்து பகுத்தறிவு என்ற போர்வையில் நமது சிந்தனைகளை சிதைத்து, பாரம்பரியத்தை குறைத்து மதிப்பிட்டு வரும் ஒரு சாரார் கூறும் கருத்தினை ஆராய்ந்து பார்க்காமல் எதையும் முடிவெடுப்பது மிகவும் தவறான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
1 Comment
அருமையான பதிவு ❤️
Comments are closed.