காந்தாரிக்கு பிறந்த 100 – ம் டெஸ்ட் டியூப் குழந்தையா? – உண்மை என்ன?
இன்று பல பெண்கள் டெஸ்ட்யூப் குழந்தைகளை பெற்றுக் கொள்வது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஆனால் இதிகாச காலத்திலேயே காந்தாரிக்கு பிறந்த நூறு பிள்ளைகளும் டெஸ்ட் டியூப் குழந்தைகளா? என்று கேட்கத் தோன்றும் படி சில நிகழ்வுகள் உள்ளது.
அந்த வகையில் மன்னர் திருதிராஷ்டிரனின் மனைவியாகிய காந்தாரிக்கு பல நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில் குந்தி தனது மூத்த மகனை பெற்றெடுத்த செய்தியை கேள்விப்பட்டு பீஷ்மர் மகிழ்ச்சி அடைகிறார்.
ஆனால் திருதிராஷ்டிரனோ மிகவும் சங்கடப்பட்டு தன் மனைவியிடம் சென்று நீ எப்போது எனக்கு பிள்ளை பெற்றுத் தருவாய் என்று மிக கோபமாக பேசி சென்று விடுகிறார். இதை அடுத்து சில நாட்களிலேயே காந்தாரிக்கும் பிள்ளை பிறக்கிறது. ஆனால் பிறக்கும் அந்தப் பிள்ளை பிண்டமாக இருந்தது.
இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட திருதராஷ்டிரன் மிகவும் மன வேதனை அடைந்து இனி தனக்குப் பிள்ளைகளே கிடைக்காது என்ற விஷயத்தை பீஷ்மரிடம் கூறினார்.
பீஷ்மரும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு மனவருத்தத்துடன் தனது தாயாகிய கங்காதேவியிடம் அந்த விஷயத்தை பகிரும் போது கங்காதேவி சிவன் அளித்த வரம் பொய் ஆகாது.
எனவே காந்தாரியின் பிண்டமானது 100 குழந்தைகளின் விதை. அதை உயிர்ப்பிக்கும் சக்தி வியாசருக்கு உள்ளது என்று கூறுகிறாள்.
இதனை அடுத்து இந்த விஷயத்தை திருதராஷ்டிரிடம் பீஷ்மர் அறிவித்து அதன் பின் தக்க மரியாதையோடு வியாசரை அழைத்து வந்து அந்த பிண்டத்தில் இருந்த பகுதிகளை 100 விதைகளாக பானையில் மாற்றி விடுகிறார்கள்.
இங்கு நூறு விதைகள் என்று கூறப்பட்டது காந்தாரியின் அண்டங்களாக இருக்கலாம். அந்த அண்டங்களை தக்க முறையில் பாதுகாக்க அவர்கள் பானையில் வைத்தது செயற்கை முறையில் அந்த கருவை வளர்ப்பதற்கு தானா என்ற கேள்வி எழுகிறது அல்லவா.
அப்படிப் பார்க்கும்போது அது ஏன் டெஸ்ட் டியூப் குழந்தையாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று தானே நினைக்க தோன்றுகிறது.
மேலும் பானைக்குள் இடப்பட்ட அந்த பிண்டத்தின் பகுதிகளுக்காக வியாசர் பூஜையை செய்கின்ற வேளையில், ஒரு பானையில் இருந்து முதல் குழந்தை வெளி வருகிறது.
அப்படி அந்த குழந்தை வெளிவரும் போது கடுமையான மின்னல்,இடி, மழை ஏற்படுகிறது. இதனை அடுத்து வியாசர் அந்த குழந்தையை எடுத்து காந்தாரியின் கையில் கொடுக்க, அவள் மகிழ்ச்சியோடு அதை திருதிராஷ்டிரன் கையில் கொடுக்கிறாள்.
அந்த குழந்தைக்கு துரியோதனன் என்ற பெயரை சூட்டி அகமகிழ்ந்து அந்த குழந்தையை கொஞ்சுகிறான். அப்போது பீஷ்மர் இந்த குழந்தை நமது குலத்தை அழிக்கக்கூடிய வகையில் பிறக்கும் போதே சகுனங்கள் ஏற்பட்டதால் அதை அழித்து விடும்படி வலியுறுத்த திருதராஷ்டிரன் அதை செய்யவில்லை.
இதனை அடுத்து 100 பானைகளில் இருந்து ஒவ்வொரு குழந்தைகளும் வெளிவர அவர்களை கௌரவர்கள் என்று அழைத்திருக்கிறார்கள்.