“ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த மதிகெட்டான் சோலை..!” – மர்மம் விலகா காடு..
எவ்வளவு தான் விஞ்ஞானம் வளர்ந்து, தொழில்நுட்பங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த காலத்திலும் சில மர்மங்கள் விளங்காமல் இருக்கிறது. அந்த வகையில் ஆங்கிலேயரை நடு நடுங்க வைத்த கொடைக்கானல் அருகில் இருக்கும் மதி கெட்டான் சோலையைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
கொடைக்கானல் அருகில் இருக்கும் இந்த மதி கெட்டான் சோலையில் ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் மக்கள் கூட அதனுள் இருக்கும் மர்ம முடிச்சுகளை அறிய முடியாமல் திணறி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த இடத்திற்கு மதிகெட்டான் சோலை என்று பெயர் வருவதற்கு காரணம், இந்த காட்டுக்குள் யார் சென்றாலும் அவர்களுக்கு புத்தி தடுமாற்றங்கள் ஏற்படுவதோடு அந்தக் காட்டில் இருந்து திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், அப்படி திரும்பி வந்தாலும் கிறுக்கு பிடித்தவர்கள் போல் இருப்பதால் இதனை கிறுக்குக்காடு என்றும் அழைக்கிறார்கள். மேலும் புத்திகள் தடுமாற்றங்கள் ஏற்படுவதால் தான் இதை மதி கெட்டான் சோலை என்று தொன்று, தொற்று அழைத்து வருகிறார்கள்.
தற்போது வரை இந்த காட்டுக்குள் எத்தகைய அமானுஷ்ய சக்தி இருக்கிறது என்பதை யாரும் கண்டறிய செல்லவில்லை. அப்படி கண்டறிய செய்பவர்களுக்கும் இது போன்ற புத்தி தடுமாற்றம் ஏற்படுவதற்கு காரணம் அங்கு பூக்கும் பூவில் இருந்து ஏற்படும் நறுமணமானது மூளையை பாதிப்படைய செய்வதாக சிலர் கூறி வருகிறார்கள்.
எனவே இந்திய அரசால் இந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு சென்ற 12 பேர் மர்மமான முறையில் இறந்து உள்ளதால் உள்ளே நுழைய வேண்டாம் என்ற அறிவிப்பு பலகையையும் வைத்திருக்கிறார்கள்.
அமேசான் போன்ற காடுகளிலே ஆராய்ச்சியாளர்கள் களம் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வரும், இந்த தருணத்தில் ஒரு குறிப்பிட்ட அமைப்பும் இதனுள் ஆய்வு செய்வதற்காக தற்போது களம் இறங்கியுள்ளது. அவர்களின் கூற்றுப்படி இங்கு அது போன்ற எந்த ஒரு மலரும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.
அப்படி இருக்கக்கூடிய சமயத்தில் இந்த பகுதிக்குள் நுழைப்பவர்களுக்கு எப்படி புத்திகள் தடுமாற்றம், மறதி ஏற்படுகிறது என்பது இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது.
எனவே தான் கொடைக்கானலில் பல பகுதிகளில் பணிகளை செய்த வெள்ளையன் கூட அந்த கிறுக்கு காட்டுக்குள் நுழைய பயந்தான் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
இன்று வரை அறிந்து கொள்ள முடியாத மர்மமாக இருக்கும் எந்த பகுதியில் போகர் செய்த நப பாஷாணங்கள் இருப்பதால் கூட எத்தகைய புத்தி தடுமாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று உள்ளூர் வாசிகள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.