வேகமாக வளரும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்..! – இனி எல்லாமே ஏஐபிஓ (AIBO) தானா?
செயற்கை நுண்ணறிவு ரோபோவை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பாக செயற்கை நுண்ணறிவு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சி நிலையின் உச்ச நிலை எனக் கூறலாம். இதன் மூலம் மனிதர்களைப் போல உள்ள இயந்திரங்களை உருவாக்கி அவற்றை தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்த முடியும்.
இந்த ரோபோக்கள் நீங்கள் கூறும் எந்த ஒரு விஷயத்தையும் உள் வாங்கிக் கொண்டு அதுவாக செயல்படுவதால் தான் இதனை செயற்கை நுண் அறிவு என்று கூறுகிறோம்.
இன்று மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் என்று கூறுகிறார்கள்.
மேலும் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியானது தற்போது ஒரு உச்சத்தை அடைந்துள்ளது என்று சொல்லலாம். அதற்கு ஏற்ப இதன் வளர்ச்சி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
தற்போது கணினியின் பயன்பாடு அதிகரித்து உள்ள நிலையில் கணினியை படித்தவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவு உள்ளது. கணினி அறிவை அடிப்படையாகக் கொண்டு தற்போது உருவாக்கப்படும் இது போன்ற ரோபோக்கள் மனிதனுக்கு உதவிகரமாக இருக்கும். குறிப்பாக இதனை மருத்துவம், ராணுவம் போன்ற துறைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆபத்தில்லாத இந்த ரோபோக்களை பார்க்கும்போது எந்திரன் திரைப்படம் தான் நினைவிற்கு வருகிறது. வகை வகையான டிசைன்களில் வடிவமைக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த ரோபோக்கள் அனைத்தும் வருங்காலத்தில் மனிதர்களை ஆளும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
இத்தகைய ரோபோக்களை மனித வளர்ச்சிக்காக எப்படி பயன்படுத்துவது என்ற இலக்கை நோக்கி தான் தற்போது உலகம் பயணம் செய்கிறது என்று கூறலாம்.
எனவே இனி வரும் காலங்களில் ஏஐபிஓ-வின் ஆதிக்கம் அதிக அளவு உலகமெங்கும் இருக்கும். அந்த சமயத்தில் மனிதர்கள் செய்கின்ற வேலைகள் அனைத்தும் இயந்திரங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு விடும்.
இதைத்தான் கடந்த 2017 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள மெக்கென்சி குளோபல் இன்ஸ்டியூட் நடத்திய ஆய்வின் முடிவு படி 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 80 கோடிக்கும் மேலான வேலைகள் எந்திரங்களின் கைகளுக்கு செல்லும் என்று கூறி இருக்கிறார்கள்.
எனவே இனி வா தலைவா பாடல்களுக்கு பதிலாக வா ரோபோ வா என்று அழைக்கக்கூடிய பாடல் வரிகள் விரைவில் வரும் என கூறலாம்.