ஆதித்தமிழர்களின் வரலாறு எப்போது தொடங்கியது தெரியுமா?
ஆதித் தமிழனின் பிறப்பும் அவன் பேசிய மொழியும், குமரிக்கண்டத்தில் இருந்து தான் ஆரம்பித்திருக்கிறது என்று பல வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த கண்டமானது நீரில் மூழ்கிய விஷயம் முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகாரத்தின் மூலம் தெரிய வந்தது.
கண்டங்கள் பிரியாத போது ஆஸ்திரேலியாவையும், தென்னாப்பிரிக்காவையும், இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த மிகப்பெரிய நிலப்பரப்பாக இந்த குமரிக்கண்டம் இருந்தது. இதனை லெமூரியா கண்டம் என்றும் அழைத்தார்கள்.
இந்த கண்டத்தில் தான் ஆதி தமிழன் தோன்றி வளர்ந்து இருக்கிறான். மேலும் இந்த கண்டத்தின் தென்மேற்கில் கிரேக்கம், மேற்கில் எகிப்து நாடு, வட மேற்கில் தென்னாப்பிரிக்கா, சீன நாடு மற்றும் கிழக்கில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, நீண்ட மலைத்தொடரும் இருந்துள்ளது.
உலகத்திற்கு நாகரீகத்தை கற்றுக் கொடுத்தவன் ஆதித்தமிழன். இவரது நாகரிகம் தான் திராவிட நாகரீகம் என்று அறியப்படுகிறது. இவன் பேசிய மொழி தான் கடல் வழியாகவும், தரை வழியாகவும் உலகெங்கிலும் குடியேறிய பகுதிகளில் பரவியது.
உலகில் தோன்றிய முதல் மனிதன் இவன் தான் என்று பல ஆய்வுகள் மெய்ப்பிக்கிறது. உலகின் மிகப்பெரிய கண்டமாக இருந்த இந்த தமிழ் கண்டம் இன்று தனித்தனியாக ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா இலங்கை மற்றும் கிழக்கில் சிறு சிறு தீவுகளாக உள்ளது.
இதில் தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் போன்ற பிரம்மாண்டமான நகரங்கள் இருந்தது. இது சுமேரிய நாகரீகத்திற்கு முன்பே தோன்றியது, நான்காயிரம் வருடங்கள் பழமையானது.
இதற்கு சாட்சியாக பினிஷியர்களின் நாணயங்களும், கல்வெட்டுகளும் நமக்கு உண்மையை எடுத்துக் கூறுகிறது. மேலும் கம்போடியாவில் உள்ள கோயில்களையும் இதற்கு சான்றாக நாம் கூறலாம்.
நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட குமரிப்பெருங்கண்டம் கடலுக்கு அடியில் இன்று அமைதியாக இருக்கிறது. ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இருந்த இந்த கண்டம் தான் மனிதர்கள் முதல் முதலில் பிறந்த கண்டமாக உள்ளது. மேலும் இங்கு இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது அந்த ஆற்றின் பெயர் பருளி மற்றும் குமரி ஆகும்.
தமிழின் முதல் சங்கம் இந்த கடலுக்கடியில் இருக்கும் தென் மதுரையில் கிமு 4440 இல் 4449 புலவர்களுடன் நடந்துள்ளது.