• November 21, 2024

“உயிரிழக்கும் போது மூளையில் ஏற்படும் ஒளி..!” – விஞ்ஞானிகள் ஆச்சரிய தகவல்..!

 “உயிரிழக்கும் போது மூளையில் ஏற்படும் ஒளி..!”  – விஞ்ஞானிகள் ஆச்சரிய தகவல்..!

brain light

பொதுவாக இறந்த பின்னால் நமக்கு என்ன நடக்கிறது, எங்கே செல்கிறோம் என்பது போன்ற விவாதங்கள் தற்போது பலர் மத்தியிலும் ஏற்படுகிறது. ஆனால் உயிரிழக்கும் போது நம் மூளையில் ஒரு விதமான பிரகாசம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்து இருப்பது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தையும், ஷாக்கையும் ஏற்படுத்தி விட்டது.

தற்போது மருத்துவத் துறையில் பலவகையான முன்னேற்றங்களை பெற்றிருக்கும் நாம் அடுத்தடுத்து ஆய்வுகளை செய்து நம் வாழ்நாளை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறோம். எனவே தான் மனிதனின் சராசரி வாழ்நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்று கூறலாம்.

brain light
brain light

இதனை அடுத்து நாம் உயிரிழக்கும் போது நாம் உடலிலும், மூளையிலும் என்ன நடக்கும் என்ற மர்மம் முடிச்சு அவிழ்ந்து உள்ளது. இதனை அடுத்து மூளையில் நடக்கும் பல சம்பவங்களை நரம்பியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த ஆய்வானது உயிரிழக்கும் தருவாயில் இருந்த இருபது பேர் மூளையில் என்ன நடந்தது என்பதை கண்டறிய ஆய்வாளர் குழு முயற்சி செய்தது. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே விலங்குகளிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் காமா அலைகள் உடலில் ஏற்படுவதால் தான் இதயம் மற்றும் சுவாசம் நிற்கிறது என்பதை கண்டறிந்தார்கள்.

இதனை அடுத்து அமெரிக்காவில் இருக்கும் மெக்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நான்கு நோயாளிகள் இறக்கும் தருவாயில் ,அவர்களது மூளையில் என்ன நடக்கிறது என்பதை குறித்து ஆய்வில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) சிக்னல்களை ஆய்வு செய்தனர். இந்த நான்கு நோயாளிகளுமே பல ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்திருக்கிறார்கள்.

brain light
brain light

இரண்டு நோயாளிகளில் காமா அலைகள் செயல்பாடு குளோபல் ஹைபோக்சியா ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். இது குறித்து ஆய்வாளர்கள் கூறும்போது மாரடைப்பு ஏற்படும் சமயத்தில் மூளையின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளாத நிலையில் நினைவிழப்பு ஏற்படும் என்பது தெரிந்தாலும் இறக்கும் போது நோயாளிகள் மறைமுக உணர்வோடு அது தொடர்பு பட்டு இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் உயிரிழந்தோரின் மூளையின் ஒரு பகுதியில் நீண்ட காமா அலைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அது மூளையின் இரு பக்கத்தில் இருக்கும் தொடர்பை காட்டியதாகவும் தெரிவித்து இருக்க கூடிய இவர்கள் இறப்புக்கு பின்னால் அந்த காமா அலைகள் என்ன செய்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

இதன் மூலம் இறக்கும் தருவாயில் மூளையில் ஒளி ஏற்படுவதை இவர்கள் தெரிவித்து இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.