சமண மதத்தை தழுவிய நூலா சிலப்பதிகாரம்..! – ஓர் அலசல்..!
சிலப்பதிகாரம் சமண சமயத்தை சேர்ந்த நூல் என்றாலும் இந்த நூலானது எந்த மதத்தாரையும் புண்படுத்தாத வகையில் மிக நேர்த்தியான முறையில் எழுதப்பட்டுள்ளது.
இந்த அற்புதமான நூலின் பெயர் காரணம் என்னவென்றால் சிலம்பை மையமாகக் கொண்டிருந்ததால் இந்தப் பெயர் ஏற்பட்டு இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். மேலும் இந்த சிலப்பதிகாரத்தை சிலம்பு கூட்டல் அதிகாரம் என்று பிரிக்கலாம்.
நெஞ்சை அள்ளும் சிவப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று பாரதியார் சிலப்பதிகாரத்தை பெருமையாக பாடி இருக்கிறார். ஐம்பெரும் காப்பியங்களில் முதல் இடத்தை பிடித்து இருக்கும் சிலப்பதிகாரம் ஒரு ஆண் எப்படி வாழ வேண்டும் என்பதை மிக அற்புதமாக எடுத்துக் காட்டி உள்ளது.
மேலும் தமிழ் மொழியில் முதலில் தோன்றியது இந்த பெரும் காப்பியம் தான். இதனை அடுத்து தான் மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்ற காப்பியங்கள் எழுந்தது. எனவே தான் இதனை ஐம்பெரும் காப்பியங்கள் என்று கூறுகிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு தொடர்புடையதா என்றால் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய காப்பியங்கள் தான்.
சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோ அடிகள், இவர் சேர குலத்தைச் சேர்ந்தவர். இவரின் உண்மையான பெயர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இந்த நூலானது சங்க காலத்திற்கும், தேவாரக் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதால் தான் சமண காப்பியம் என்று பலர் இதனை கூறுகிறார்கள்.
குடிமகன் எப்படி இருக்க வேண்டும் என்ற சிறப்பு இயல்புகளை எடுத்து இந்த காவியம் கூறுவதால் இதனை குடிமக்கள் காப்பியம் என்று கூறுவார்கள்.
மேலும் இந்த காப்பியத்தின் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் நடக்கும் நிகழ்வுகள் சேர நாடு, சோழநாடு, பாண்டியநாடு போன்றவற்றில் நிகழ்வதாக கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக மதுரை, பூம்புகார், வஞ்சி ஆகிய ஒவ்வொரு தலைநகரங்களிலும் இந்த நிகழ்வுகள் நடந்திருக்கும்.
இந்த அற்புதமான காவியத்தில் காலத்திற்கும் பொருந்தக்கூடிய 3 உண்மைகள் மிகத் தெளிவான முறையில் கூறப்பட்டுள்ளது அவை முறையே
- அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
- உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
- ஊழ்வினை ஊழ்வினை உறுத்த வந்து ஊட்டும்.
இந்த மூன்று உண்மைகளும் எல்லோருக்கும் பொருந்தும் படி உள்ளதால் இதை கடைப்பிடித்து வந்தாலே வீடு மட்டுமல்லாமல் நாடும் செழிப்படையும் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.