• December 26, 2024

பாம்பை வைத்து Skipping விளையாடும் இளைஞர் !!!

 பாம்பை வைத்து Skipping விளையாடும் இளைஞர் !!!

விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வருகின்றன. பெரும்பாலும் வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது வழக்கம்.

ஆனால் இந்த பதிவில் நாம் காணப்போகும் வீடியோ நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துவதற்கு பதில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

What Your Love of Funny Cat Videos Says About Your Personality, According  to Science | Inc.com

இந்த வீடியோவில் ஒரு நபர் ஒரு பெரிய பாம்பை இருகைகளால் பிடித்து அதை வைத்து ஸ்கிப்பிங் (Skipping) செய்து விளையாடுகிறார். வனவிலங்குகளை சித்திரவதை செய்வது சட்டப்பூர்வமான குற்றமாகும், அதை மீறி சித்ரவதை செய்தால் கடுமையான தண்டனையும் வழங்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். “விலங்குகள் பாதுகாப்பு சட்டம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கண்களில் இந்த வீடியோ படும்வரை இந்த வீடியோவை பகிருங்கள்”, எனவும் நெட்டிசன்கள் முனைப்புடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

வெளியாகியுள்ள இந்த வீடியோவில் பாம்பின் தலையையும் வாலையும் தனது கையில் பிடித்தபடி அதை வைத்து துள்ளிக்குதித்து ஸ்கிப்பிங் செய்கிறார் இந்த ஆசாமி. இந்த நபருக்கு விரைவில் சட்டப்படி தண்டனை கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Resolution - Animal Cruelty

நாய், பூனைகள் போன்ற செல்ல பிராணிகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும்பாலும் வைரலாகும். சமூக வலைதளங்களில் வீடியோவை நிறைய பேர் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாம்பை வைத்து இதுபோன்ற ஒரு வேலையை இந்த இளைஞர் செய்திருக்கலாம்.

சமூக வலைதளங்களில் வைரல் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஒருவரை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது, என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

பாம்பை வைத்து ஸ்கிப்பிங் செய்யும் அந்த இளைஞனின் வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு deep டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.