கிரிக்கெட்ல இப்படி கூட Wide கொடுப்பாங்களா !!!
நாள்தோறும் கிரிக்கெட் விளையாட்டில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் நடைபெற்று கொண்டிருக்கும் உள்ளூர் டி20 தொடர் ஒன்றில் umpire வித்தியாசமான முறையில் wide காண்பித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பொதுவாக பேட்ஸ்மென் அடிக்க முடியாத அளவுக்கு பந்து வீசும் பட்சத்தில் கிரிக்கெட்டில் wide கொடுப்பது வழக்கம். இரண்டு கைகளை நீட்டியவாறு அம்பயர் wide-ஐ கொடுப்பார். ஆனால் தலைகீழாக நின்று கால்களை விரித்து வித்தியாசமான முறையில் wide கொடுத்துள்ளார் இந்த வினோத umpire.
மகாராஷ்டிராவில் புரந்தர் பிரீமியர் லீக் எனும் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் கடிபதர் கிங்ஸ் மற்றும் பிவரி பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பௌலர் ஒரு அடிக்க முடியாத அகல பந்தை வீசினார். இந்தப் பந்தை பார்த்து குஷியான அம்பயர் திடீரென தலைகீழாக நின்று கால்களை அகல விரித்து wide என குறிப்பிட்டார்.
இவர் வினோதமான முறையில் wide காட்டும் வீடியோவானது சமூகவலைதளங்களில் நகைச்சுவையான கருத்துக்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த வீடியோவை பாகிஸ்தானை சேர்ந்த பிரபல கிரிக்கெட் analyst சாஜ் சாதிக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வபோது அம்பயர் பில்லி பவுடன் கொடுக்கும் வித்தியாசமான சிக்சர் மற்றும் பவுண்டரி சிக்னல்கள் லைவ் மேட்ச் பார்க்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். அந்த வகையில் பில்லி பவுடனையே மிஞ்சும் இந்த உள்ளூர் கிரிக்கெட்டின் சாகச umpire சமூக வலைதளங்களில் பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறார்.
கால்களை விரித்து wide கொடுக்கும் அந்த umpire-ன் வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.