காசே இல்லாமல் 40 நாடுகளுக்கு பயணம் செய்த இளைஞன் !!!
உலகை சுற்றி பயணம் செய்வது என்றால் யாருக்குதான் பிடிக்காது ? ஆனால் அப்படி பயணம் செய்யாமல் இருப்பதற்கு பொருளாதாரமே ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். காசே இல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த ஒரு ஆச்சரிய ஆசாமியை பற்றிய பதிவுதான் இது.
சுபம் யாதவ் எனும் 20 வயது வாலிபர் ஒருவர் எந்த செலவும் இல்லாமல் லிப்ட் கேட்டு பயணம் செய்வது மூலமாகவே தனது வாழ்நாளில் ஏறத்தாழ 55 ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து ஊர் சுற்றியுள்ளார். கேட்பதற்கு நம்பும்படியாக இல்லாவிட்டாலும் அதுதான் நிஜம்.
சுபம் யாதவ் தனக்கென ஒரு யூடியூப் சேனலை வைத்துள்ளார். அதில் அவருக்கு 16 லட்சம் subscriber-களும் உள்ளனர். தான் பயணம் செய்யும் இடங்களுக்கு எப்படியெல்லாம் லிப்ட் கேட்டு செல்கிறார் என்பதை வீடியோக்களாக அவரது சேனலிலும் பதிவிட்டு வந்துள்ளார்.
கையில் ஒரு பையுடன், உடுத்துவதற்கு 4 துணிகள், கூடாரம் அமைப்பதற்கு தேவையான பொருட்கள், ஒரு வீடியோ கேமரா ஆகியவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு 40 நாடுகளுக்கு மேல் சுபம் யாதவ் நான்கு வருடங்களுக்குள் பயணம் செய்துள்ளார். இவரது பயணத்தில் இவர், மறைந்த தீவிரவாதியான ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த வீட்டிற்கும் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
20 வயதில் இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து இருந்தாலே அது பெரிய விஷயமாக கருதப்படும் சூழலில் தன்னுடைய இருபது வயதில் 40 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ளார் சுபம் யாதவ்.
இவரது யூடியூப் சேனலில் இவர் போடும் வீடியோக்களுக்கு நெட்டிசன்கள், “எங்களுக்கும் இதேபோல பயணம் செய்ய ஆசையாக உள்ளது” என கருத்து தெரிவிப்பது வழக்கம். பயணம் செய்ய ஆசை இருந்தால் பணம் ஒரு தடையில்லை என்பதற்கு சுபம் யாதவின் கதை ஒரு எடுத்துக்காட்டு.
சுபம் யாதவின் யூடியூப் வீடியோ ஒன்றை கீழே காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.