• December 3, 2024

அதிகம் சாப்பிட்டதால் வாடிக்கையாளருக்கு தடை விதித்த உணவகம் !!!

 அதிகம் சாப்பிட்டதால் வாடிக்கையாளருக்கு தடை விதித்த உணவகம்  !!!

பரோட்டா சூரியின் பரோட்டா காமெடியை போன்ற சம்பவம் ஒன்று சைனாவில் அரங்கேறியுள்ளது. உணவகத்தில் அளவுக்கு மீறி உணவு அருந்திய காரணத்தால் காங் என்பவரை ஒரு சைனீஸ் உணவகம் உணவகத்திற்குள் நுழைய தடை விதித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல உணவகங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மீறி உணவு அருந்தினால் அதற்கு பரிசு தொகை ஒன்றை வழங்குவோம் என அறிவித்து உணவு போட்டிகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் சைனாவின் சாங்ஷா நகரில் ஒரு உணவகத்தில் all you can eat எனும் பெயரில் ஒரு உணவகம் இதே போன்ற உணவு போட்டிகளை நடத்தி வந்துள்ளது.

Parota Soori.Soori Comedy Collection | Tamil Latest Comedy Collection | -  YouTube

இதில் அளவுக்கு மீறி ஒருவர் உணவை அருந்தியுள்ளதால் அந்த ஹோட்டலின் உரிமையாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த உணவகத்தின் உரிமையாளர் கூறுகையில், “காங் எனும் இந்த மனிதர் முதலில் எங்கள் உணவகத்திற்கு வந்தபோது ஒன்றை கிலோ பன்றி கறி சாப்பிட்டார், அதற்கு பின் இரண்டு முறை வந்தபோது 4 கிலோ இறால் சாப்பிட்டுள்ளார். இதனால் எங்கள் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.” என கூறியுள்ளார்.

காங் தரப்பில், “என்னை தடை செய்தது நியாயமல்ல. அந்த உணவகத்தின் அறிவுறுத்தலின் பெயரிலேயே நான் இந்த உணவுகளை அருந்தியுள்ளேன்” என கூறுகிறார். இந்நிலையில் அதிகமான மன உளைச்சலுக்கும் நஷ்டத்திற்கு உள்ளான அந்த ஹோட்டல் நிறுவனம் காங்கிற்கு தங்களது உணவகத்திற்கு வருவதற்கு தடை விதித்துள்ளனர்.

Soori: தனக்கு தானே ஹோட்டல் வச்ச ஒரே ஆளு நம்ம புரோட்டா மாஸ்டர் சூரி தான்! -  actor vikranth starrer vennila kabaddi kuzhu 2 soori's parotta hotel video  goes viral | Samayam Tamil

“பசி வந்தால் அளவு தெரியாது” என சொல்வது போல, பசியில் இருப்பவர்கள் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்பது தெரியாமல் இதுபோன்ற அறிவிப்புகளை உணவகங்கள் விடக்கூடாது என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பல கருத்துக்களை முன்வைத்து வாதாடி வருகின்றனர்.

இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்.