• November 22, 2024

எறும்பை விட சிறிய ரோபோட் !!!

 எறும்பை விட சிறிய ரோபோட் !!!

தொழில்நுட்பம் எண்ணிப் பார்க்க முடியாத வளர்ச்சியை அடைந்துள்ள இக்காலத்தில் பார்க்கும் இடங்களிலெல்லாம் புதுப்புது எந்திரங்கள் மனித இனத்தை ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் எறும்பை விட சிறிய ரோபோட் ஒன்றை நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.

இந்த எந்திரத்திற்கு Micro Fliers என விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். மனிதர்கள் இதுவரை உருவாக்கியுள்ள எந்திரங்களில் இதுவே சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.

manmade flying robot

எந்திரன் போன்ற திரைப்படங்களை நாம் பார்க்கும்போதெல்லாம், “இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?” எனும் கேள்வி நம்முள் எழுந்திருக்கும். ஆனால் கம்ப்யூட்டர் உலகில் எல்லாம் சாத்தியமே என்ற பதிலை தொழில்நுட்பம் நமக்கு தினசரி எடுத்துரைக்கிறது.

பார்ப்பதற்கே ஒரு சிறிய பூச்சியைப் போல இருக்கும் இந்த Micro Flier ரோபோக்கள் காற்றின் மாசு அளவை கண்டறிய உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி எலக்ட்ரானிக் கழிவுகள் எனப்படும் E-waste-ஐ கண்டறியவும் இந்த ரோபோட் பயன்படும் என அறிவித்துள்ளனர்.

இந்த Robot எவ்வளவு சிறியது என்பதை உணர்த்த ஒரு எறும்புக்கு அருகில் இந்த ரோபோவை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களையும் இயற்கையையும் பாதிக்காமல் இருக்கும் வரை இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளை நாம் நிச்சயம் ஆதரிக்கலாம்.

நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிறிய வகை ரோபோவின் புகைப்படத்தை கீழே காணுங்கள்.

world smallest flying structure

இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.