Apology Soup கொடுத்து மன்னிப்பு கேட்ட மேல் வீட்டு காரர் !!!
பொதுவாக நாம் தூங்கும்போது நம் தூக்கத்தை கெடுக்கும் படி யாராவது ஏதேனும் சத்தம் போட்டால் அதை சகித்துக் கொள்வது சற்று கடினமே. பெரும்பாலான தெருக்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் இரு குடும்பங்களுக்கு இடையே சண்டைகள் வருவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம்.
இதுபோன்ற ஒரு பிரச்சனையை சண்டை வரை எடுத்துச் செல்லாமல் Soup-ஐயும், மூன்று பேப்பர் மன்னிப்பு கடிதத்தையும் வைத்து சுலபமாக முடித்திருக்கிறார் ஒரு உத்தம வில்லன். கேஜி என்றவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேஜியின் வீட்டிற்கு மேலே குடியிருப்பவர்கள் இரவு 2 மணி வரை சத்தம்போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இது கேஜியின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. ஆனால் அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு மேல் வீட்டிலிருந்து ஒரு சூப் கேனும், மன்னிப்பு கடிதமும் வந்துள்ளது.
இதைப் பார்த்த கேஜி அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளார். அந்த கடிதத்தில், “கடந்த இரவு நாங்கள் மது அருந்தி விட்டு விளையாடி பயங்கரமான சலசலப்பை ஏற்படுத்தி உள்ளோம். அதற்கு எங்களது மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம். இவ்வளவு நடந்தும் அதை சகித்துக் கொண்டதற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் இந்தக் கடிதத்துடன் சேர்த்து இட்டாலியன் ஸ்டைல் meatball soup ஒன்றையும் உங்களுக்கு கொடுக்கிறோம். இதனை Apology சூப் என்று கருதிக் கொள்ளுங்கள்.”, என குறிப்பிட்டு இருந்தனர்.
கேஜி பதிவிட்ட இந்த ட்விட்டர் பதிவை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்பவத்தை பார்க்கும்போது மேல் வீட்டில் குடி இருந்தவர்களிடம் நீங்கள் நல்லவரா? இல்ல கெட்டவரா ?என்றுதான் கேட்கத் தோனுகிறது.
- அமேசான் நதி வறட்சி: உலகின் நுரையீரல் அழிந்துவிடுமா? பூமியின் எதிர்காலம் கேள்விக்குறி!
- சதுர வடிவ விண்கல்: ஹோபா எரிக்கல்லின் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல்!
- வாழ்க்கையின் கசப்பான உண்மைகள் – ஒரு சிங்கத்தின் கடைசி பாடம்
- தன்னம்பிக்கையே வெற்றியின் முதல் படி!
- பெருமிதத்துடன் பதிலளித்த ஆபிரகாம் லிங்கன்
கேஜி பதிவிட்ட ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற பதிவுகளுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.