
வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகராட்சியின் 82வது பிறந்தநாள் இன்று. 1639 ஆம் ஆண்டிலிருந்து 2021 வரை பல்வேறு சிறப்பு மிக்க வரலாறுகளை கொண்ட சென்னையின் சில முக்கிய சிறப்புகளை இப்பதிவில் காணலாம்.
உலகிலேயே லண்டனுக்கு அடுத்து நிறுவப்பட்ட மாநகராட்சி நமது சென்னை தான். 1987ஆம் ஆண்டு சென்னை கார்ப்பரேஷன் அந்தஸ்தை பெற்றது.

சிறுசேரியில் அமைந்துள்ள தொழில்நுட்ப பூங்கா தான் ஆசியாவிலேயே பெரிய தொழில் நுட்ப பூங்கா. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே தொழில்நுட்பம் மற்றும் BPO நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைநகராய் சென்னை திகழ்கிறது.
உலகிலேயே 37வது பெரிய மெட்ரோபாலிடன் பெருநகரம் சென்னையே. இந்தியாவிலேயே இது நான்காவது பிரபலமான பெருநகரம் ஆகும்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now1959ஆம் ஆண்டு சென்னையில் LIC கட்டிடம் கட்டப்பட்டது. அந்த சமயத்தில் அதுதான் இந்தியாவிலேயே உயரமான கட்டிடம் ஆகும்.

உலகிலேயே இரண்டாவது பெரிய நீதிமன்றம் நமது மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தான். லண்டனுக்கு பிறகு அதிக பரப்பளவில் கட்டப்பட்ட நீதிமன்றம் இதுதான்.
கோயம்பேட்டில் அமைந்துள்ள பேருந்து நிலையமே ஆசியாவின் பெரிய பேருந்து நிலையமாகும். இது 2002ஆம் ஆண்டு தமிழக அரசால் நிறுவப்பட்டது.
ஆசியாவிலேயே பெரிய நூலகம் சென்னையில் தான் அமைந்துள்ளது. கிண்டியில் உள்ள அண்ணா நூற்றாண்டு உலகமே ஆசியாவின் பெரிய நூலகம் ஆகும்.
முதலாம் உலகப்போரில் இந்தியாவில் தாக்குதலுக்கு உள்ளான ஒரே நகரம் சென்னை தான்.
அண்ணா சாலையில் அமைந்துள்ள ஸ்பென்சர் பிளாசா தான் இந்தியாவிலேயே மிகப்பழமையான ஷாப்பிங் மால் ஆகும். இது 1863ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது.
ராயபுரம் ரயில் நிலையம் தான் தற்போது இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் மிகவும் பழமையானது. இந்த ரயில் நிலையம் 1856 ஆம் ஆண்டு British அரசாங்கத்தால் கட்டப்பட்டது.
இந்தியாவிலேயே மக்களின் பார்வைக்கு உருவாக்கப்பட்ட முதல் விலங்கியல் பூங்கா வண்டலூர் விலங்கியல் பூங்கா தான். அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே மிகவும் பழமையான விலங்கியல் பூங்காவும் இதுதான்.
- மதிமுக சீனியர்கள் மோதல்: துரை வைகோ பதவி விலகல் – வைகோவின் கட்சியில் உடைசல் ஏன்?
- நடிகர் சூரியின் அடுத்த திரைப்படம் ‘மண்டாடி’: மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் புதிய திருப்பம் காணப் போகிறாரா?
- தர்மத்தின் குரல் முதல் திரை நாயகன் வரை: KPY பாலாவின் அசாத்திய பயணம் எப்படி சாத்தியமானது?
- சச்சின் படத்தில் விஜய்க்கு முன் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்க இருந்தது உண்மைதானா?
- தி.நகர் பெயருக்கு காரணமான சர் பிட்டி தியாகராயர் – சென்னையின் முதல் மேயர் முதல் சமூக நீதி வரை அவரது பயணம் எப்படி?
சென்னைக்கு உள்ள பல சிறப்புகளில் சிறு பொறிகளே இவை. ஜாதி மத பேதமின்றி வந்தவர்களையெல்லாம் வணக்கம் சொல்லி வரவேற்று வாழ்க்கை கொடுக்கும் சென்னை மாநகராட்சிக்கு Deep Talks தமிழ் சார்பில் சென்னை தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.