• November 21, 2024

ஒரு டிஷ்யூ பேப்பரின் விலை 7.5 கோடியா !!!

 ஒரு டிஷ்யூ பேப்பரின் விலை 7.5 கோடியா !!!

ஒரு டிஷ்யூ-வின் விலை நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து PSG அணிக்கு மாறினார். பார்சிலோனா அணியிலிருந்து விலகும்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கண்ணீர்மல்க விடைபெற்றார் மெஸ்ஸி.

PSG confirm £1m-a-week contract for Lionel Messi

இந்நிலையில் அந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மெஸ்ஸி கண்ணீர் துடைக்க உபயோகப்படுத்திய Tissue பேப்பர் ஆனது ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்படும் என விளம்பரம் வெளியாகியுள்ளது. ஒரு பிரபலம் கண்ணீர் துடைக்க உபயோகித்த டிஷ்யூவுக்கு இவ்வளவு மதிப்பா என்ன உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த சம்பவம்.

Lionel Messi in tears at FC Barcelona press conference farewell with PSG  deal imminent | Evening Standard

மெஸ்ஸி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவர் உபயோகித்த டிஷ்யூ பேப்பரை யாரோ ஒருவர் எடுத்து வைத்துள்ளார். அந்த Tissue பேப்பரை விற்கப் போவதாக ஆன்லைனில் விளம்பரமும் செய்துள்ளார்.

அந்த விளம்பரத்தில், டிஷ்யூ பேப்பரில் மெஸ்ஸியின் மரபியல் பொருள் அடங்கியுள்ளதாகவும் பிற்காலத்தில் மெஸ்ஸி போன்ற ஒருவரை Clone செய்ய அந்த மரபியல் பொருள் உதவும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த விளம்பரமானது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த விளம்பரம் அதிகம் பகிரப்படும் நிலையில், மெஸ்ஸி உபயோகப்படுத்திய டிஷ்யூ பேப்பரை போன்ற போலி டிஷ்யூ பேப்பர்கள் குறைந்த விலைக்கு அர்ஜென்டினாவில் விற்கப்படுகிறது. ஒரு மில்லியன் டாலர் செலவு செய்து இந்த டிஷ்யூ பேப்பரை யாராவது வாங்குவார்களா என்பதே நெட்டிசன்களின் கேள்வியாக சமூகவலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது.

நம் இந்திய ரூபாய் மதிப்பின் படி ஒரு மில்லியன் டாலர் என்பது ஏறத்தாள 7 கோடியே 43 லட்சம் ரூபாயாகும். ஒரு விளையாட்டு வீரரின் பெயரை வைத்து இப்படியெல்லாம் வியாபாரம் செய்ய முடியுமா என ஆச்சரியப்பட வைக்கிறது மெஸ்ஸியின் இந்த Tissue கதை.

இந்த Tissue பேப்பர்-ன் விளம்பரம் அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.