• January 3, 2025

இந்த பெண் சொல்றதெல்லாம் உண்மையா ???

 இந்த பெண் சொல்றதெல்லாம் உண்மையா ???

தெருவில் குப்பைகளை பொறுக்கும் ஒரு பெண் சரளமாக ஆங்கிலத்தில் பேசி தன்னைப்பற்றி கூறியுள்ள வீடியோ பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. பெங்களூரில் இவர் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் உள்ள காந்தி நகரில் வசிப்பதாக கூறும் இந்த பெண், இதற்கு முன் ஏழு வருடங்கள் ஜப்பானில் தன் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதே தனது குடும்பத்தினர் குடும்பத்தை விட்டு தன்னைத் துரத்த திட்டம் தீட்டியதாக அவர் கூறுகிறார்.

சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் உடைய இந்தப் பெண் ஒரு Anglo-Indian ஆக இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த வீடியோவை எடுப்பவர், “நீங்கள் தனியாக தான் இருக்கிறீர்களா?”, என கேட்டதற்கு அந்தப் பெண் தன்னிடம் இருந்த மேரி புகைப்படத்தை காண்பித்து, “கடவுளுடன் இருக்கும் நான் எப்படி தனியாக இருப்பதாக நீங்கள் கூறலாம்?”, என கேள்வி எழுப்பினார்.

தன்னிடம் இருந்த சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு தனது குடும்பத்தினர் தன்னை இப்படி துரத்தி விட்டனர் என அந்தப்பெண் கூறுகிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது மட்டுமின்றி சரளமாக பாடவும் செய்கிறார் இவர்.

பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து அந்த வயதான பெண்ணை பற்றியும், அவர் கூறும் கதைகளை பற்றியும் கருத்துக்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வயதான பெண் தன்னை பற்றி ஆங்கிலத்தில் கூறும் வீடியோவை கீழே காணுங்கள்.

இது போன்ற பதிவுகளுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.