2 லிட்டர் சோடாவை வைத்து கின்னஸ் சாதனை புரிந்த எரிக் பூக்கர் !!
Youtube-ல் Food Vlogging சேனல் வைத்திருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் பூக்கர் என்பவர் ஒரு புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். சர்க்கரை ஏதுமில்லாத கோலா சோடாவை 19 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் குடித்து முடித்து சாதனை புரிந்துள்ளார்.
தான் செய்த இந்த கின்னஸ் சாதனையை Youtube-ல் வீடியோவாக அவரே பதிவேற்றியுள்ளார். 2 லிட்டர் சோடாவை 18.45 விநாடிகளில் எரிக் குடித்து முடித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு பாட்டிலில் இருந்த சோடாவை 2 லிட்டர் அளவிலான ஒரு பெரிய கோப்பையில் ஊற்றி குடிப்பதற்கு முன் வீடியோவை பார்ப்பவர்களுக்கு சோடாவின் அளவை உறுதி செய்து காண்பித்தார்.
அந்த சோடாவை குடிப்பதற்கு முன் சோடாவை ஊற்றும்போது கிளம்பும் சத்தத்தை விட மகிழ்ச்சி தருவது வேறு எதுவும் இருக்க முடியாது என எரிக் கூறியுள்ளார். இந்த சாதனையை புரிவதற்கு முன் 2 லிட்டர் சோடாவை 30 வினாடிகளில் குடித்து முடித்ததே தனது முந்தைய சாதனை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எரிக் பூக்கர் தனது யூடியூப் சேனலில் 3 மில்லியன் Subscriber-களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு லிட்டர் சோடாவை 18.45 வினாடிகளில் குடித்து முடித்துவிட்டு “இது மிகவும் சுவையாக இருந்தது” என எரிக் வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோவை எடுப்பதற்கு எரிக்கின் மகன் தான் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை உள்ள கோலாவை குறைந்த நேரத்தில் அதிகமாக எடுத்துக் கொள்வதே கடினமாக இருக்கும் பட்சத்தில் சர்க்கரை இல்லாத சோடாவை எரிக் பூக்கர் இவ்வளவு வேகமாக குடித்துள்ளது வியக்கத்தக்க விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
2 லிட்டர் சோடாவை வேகமாக அருந்தி கின்னஸ் சாதனை படைத்த எரிக் பூக்கர் அவர்களுக்கு Deep Talks தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது கின்னஸ் சாதனை வீடியோவை கீழே காணுங்கள்.
மேலும் தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.