• December 21, 2024

மிகவும் மாஸான ஒரு திருக்குறள் இது!

 மிகவும் மாஸான ஒரு திருக்குறள் இது!

“நாயகனை மிகைப்படுத்தி (மாஸாக) காட்டுவதென்பது திரைப்படங்களில் மட்டும் தான் நடக்கிறது” என்று எண்ணுபவர்களுக்காக இந்த குறளை இங்கு பதிவிட்டிருக்கிறேன்.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயன் வள்ளுவர் எப்படிப்பட்ட ஒரு பில்ட்-அப் காட்சியை நமக்கு கற்பனையில் படைத்திருக்கிறார் என்பதை காட்சியோடு உங்களுக்கு தெளிவாக விளக்குகிறேன்.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்.

பால்: பொருட்பால் – அதிகாரம்: படைச்செருக்கு – குறள் எண்:774

விளக்கம்:

  • ஆக்ரோஷமாக போர் நடந்து கொண்டிருக்கிறது
  • நாயகன் கையில் வேலினை வைத்து கொண்டு போரிட்டு கொண்டு இருக்கிறான்.
  • ஒரு கட்டத்தில் எதிரி நாட்டு யானையிடம் நேருக்கு நேராக போரிட்டு அதனை வீழ்த்த நினைக்கிறான்.
  • யானையும் இவனை தாக்க நேருக்கு நேராக வருகிறது
  • அப்போது தன் கையிலிருந்த வேலினை யானையின் மீது குறி பார்த்து வீசுகிறான்.
  • அது சரியாக யானையின் மத்தகத்துக்குள் பாய்ந்தது.
  • இன்னும் சிறிது நேரத்தில் அந்த யானை இறக்க போகிறது
  • ஆனால் யானைக்கென்று ஒரு அசுரபலம் இருக்கிறது
  • என்னதான் அது தாக்கப்பட்டாலும் நாயகனை நோக்கி கோவத்தோடு முன்னேறுகிறது
  • இந்த நேரத்தில் இன்னொரு வேல் இருந்தால் யானையை சுலபமாக வீழ்த்தி மண்ணில் சாய்க்க முடியும் என்று நாயகனுக்கு தோன்ற
  • இடதுபுறம் வலதுபுறம் என எல்லா இடங்களிலும் வேலினை தேடுகிறான்
  • மத்தகத்துக்குள் பாய்ந்த வேலோடு யானை அவனை நெருங்கி வர
  • இறுதியில் நாயகனுக்கு வேல் கிடைத்து விட்டது
  • வேல் எங்கே இருந்தது என்றால்
  • பகைவன் ஒருவன் எறிந்த வேல் அவன் நெஞ்சில் பாய
  • நெஞ்சில் இருந்த வேலினை பார்த்து சிரித்தான் நாயகன்.

என்று அற்புதமாக அந்த காட்சியை எழுதியுள்ளார் திருவள்ளுவர். இதேபோல் உங்களுக்கு பிடித்த திருக்குறளை இங்கே பதிவிடுங்கள்.

இதை வீடியோவாக பார்க்க: