கரம் தந்து முகவரி தந்த முதியோர் இல்லம்!
வாங்கிய ஒரு வரமாய் பெற்றெடுத்த பிள்ளைகள்
தாங்கிய படகு மரமாய் சென்று வந்த எல்லைகள்
வாரிசுகள் என்றல்லவா வாரியணைத்து வளர்த்தார்கள்
வாய் மொழிந்ததற்கே வாரியிறைத்து திளைத்தார்கள்
வாலிபங்கள் வந்தேற வலிமை காலங்கள்
வலைத்து கட்டிய கோலாகலத் திருமண விழா தருணங்கள்
மருமகளாய் கால்வைத்தாள்
மஹாலெட்சுமி மருமகள்
தலையணை மந்திரங்களால் தலைவனை மந்திரிக்க
இல்லறமங்கே அறம்மாறி
நல்லறமன்றே நரகமாய்..
கடும் வார்த்தைகளால் வீசிடும் புயலைப் போல் புதல்வர்கள்
தாங்கிய தூண்களாய் சாய்ந்த தந்தை தாய்
கள்ளமில்லா உள்ளமெல்லாம் முகம்மாறிய நடிப்புத் திரைகளில்
வேறு வழியின்றி சரண் புகுந்த அநாதை இல்லங்கள்
நினைவுகளோ மதியாத மகன்கள் மகள்களிடமே
கலங்கிய கண்ணீரில் கரைந்ததே உள்ளமே!
அழுகையை துடைத்து
அரவணைப்பில் ஆதரவாய்
கரம் தந்து முகவரி தந்தது
முதியோர் இல்லமே!
பூமியில் பூக்கும் பூக்களெல்லாம்
பூங்காவில் தான் பூத்திடுமா!
காட்டிலும் மேட்டிலும் பூத்திடும்
பூக்களும் அழகாகிடுமே.!!