• December 22, 2024

ஓரு பொறியாளனின் காதல்!

 ஓரு பொறியாளனின் காதல்!

மாயவளே!
உன்னை என்னுள் பதிவிறக்கம் செய்த நேரம்…
என் செவியின் கடவுச்சொல் நீயனாய்!
என் விழியின் காட்சிப்படம் நீயனாய்!!

தூயவளே!
உன்னை என் தரவுத்தளத்தினில் நிரப்பிய தருணம்…
என் கருத்துகளின் மறையாக்கம் நீயனாய்!
என் வார்த்தைகளின் மறைவிலக்கம் நீயனாய்!!

என்னவளே!
உன்னை என் உதிரத்தில் உள்ளீடு செய்த நேரம்…
என் இதயத்தின் நிரல்பெயர்ப்பி நீயனாய்!
என் உயிரின் பயன்பாட்டு நிரலர் நீயனாய்!!

விரும்புகிறேன்…
என் தீர்வுநெறி நீயாக…
உன் மூலக்குறிமுறை நானாக…
நம் காதல் மையச்செயலியாக!!!

Translations for Tamil Words From This Kavithai

பதிவிறக்கம்

Download

கடவுச்சொல்

Password

காட்சிப்படம்

Display Picture

தரவுத்தளம்

Database

மறையாக்கம்

Encryption

மறைவிலக்கம்

Decryption

உள்ளீடு

Input

நிரல்பெயர்ப்பி

Compiler

பயன்பாட்டு நிரலர்

Application Programmer

தீர்வுநெறி

Algorithm

மூலக்குறிமுறை

Source Code

மையச்செயலியாக

Central Processor 

S. Aravindhan Subramaniyan

Sanofar

Writer