கனவுகளுக்கு இல்லை கட்டுப்பாடு!
வானின் எல்லையை தொட,
நீ வழிகளை தேடு!
நீ விரும்பும் பாதையை
நோக்கி நீ ஓடு!!
யார் உன்னைத் தாழ்த்தினாலும்,
அதை தவிர்த்து உன் தடத்தை நீ நாட்டு!!!
சமானியனாய் வாழ்ந்து மாண்டு போவதை நீ தூக்கிப்போடு..
பணம் உன்னை கீழே போட்டாலும்,
உன் திறமையே உன்னை தாலாட்டும்..!
– இரா.கார்த்திகா