காதல் துளி!
தீண்டும் திங்களின் துகள்களில் ஒளிறவே,
மீண்டும் பூமியில் மலர்ந்தேன்!
ஓடும் நதியின் ஓசை கேட்கவே,
கரையினில் மண்ணென சேர்ந்தேன்!!
காலைக் கதிரவன் கதிரினில் திரவமாய்,
தீயை மூட்டி தடம் ஒன்று செய்தேன்!!!
விழிகளில் விழுந்த விதையென
முளைத்தாய்…
உணர்வினில் மதுரமாய் கலந்தெனைச் சாய்த்தாய்…!
நீங்காமல் நீங்கியே சேராமல் சேர்வோம்;
காதலின் உள்ளே மழையென பொழிவோம்!
– இரா.கார்த்திகா