கடற்கரையில் ஒரு நாள்!
அவளும் நானும்,
சுற்றுலா பயணத்தின் இடையில்
சற்றே புறப்படும் சமயத்தில்,
ஆசையாய் சென்றோம் ஆர்ப்பரிக்க!
அனல் பறக்கும் காற்றும்,
சுட்டெரிக்கும் மணலும்,
விடியும் வெண்ணிலவும்,
தன் விருந்துக்கு வரவேற்க,
அலைகளோ !
ஒன்றன் மேல் ஒன்றாய்,
முந்தி வந்து முத்தமிட,
முன்னும் பின்னுமாய் ஓடினோம்.
ஆடி பாடிடும் மழலைகளும்
ஆசை மணல் வீட்டினை கட்ட,
அங்கும் இங்குமாய் அலைய,
குதித்தோடும் குதிரை சவாரியும்,
சுவையூட்டும் சூடான சுண்டலும்,
சோர்வினைப் போக்க,
இன்னல்களை மறந்த மக்கள்
இன்பமாய் – இன்புற்று இருக்க,
மெல்லிய பூங்காற்று – மென்மையாய்
மேனி மேல் ஊடுறுவ,
மெய் சிலிர்த்து நின்றோம்…
உன் பேரழகினைக் கண்டு!
பிரிய மனமில்லாமல் பிரிந்தோம்
பிரியா விடைப்பெற்று!!!
K. கார்த்திக்
செஞ்சிக் கோட்டை,
விழுப்புரம் மாவட்டம்.