“இன்னும் மர்மம் நீங்காத இந்திய கிராமங்கள்..!” – படிக்க படிக்க ஆச்சரியம் ஏற்படும்..
இந்தியாவில் இருக்கும் பல கிராமங்களில் பல விதமான மர்மங்கள் இன்றும் தீர்க்க முடியாத அளவு உள்ளது. அப்படி என்னென்ன கிராமங்கள் மர்மமான முறையில் உள்ளது என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் முதலாவதாக கர்நாடகாவில் இருக்கும் சிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் சமஸ்கிருதம் பேசும் கிராமமாக திகழ்கிறது. கர்நாடகாவில் அரசு மொழியாக இருக்கும் கன்னடத்தை விடுத்து இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தை பயன்படுத்துவது மர்மமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.
இரண்டாவது இடத்தில் நாகர்லாந்து இருக்கும் லாங்குவா கிராமம் உள்ளது. இந்த கிராமமானது லங்கா இந்தியா மியான்மருக்கு இடையில் ஆன ஒரு புவியியல் எல்லைக்கோட்டின் அருகே அமைந்துள்ளதால் இந்த மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதே போல் நாகலாந்தில் அமைந்துள்ள கோனோமா பகுதியானது இந்தியாவின் பசுமையான கிராமமாக கூறப்படுகிறது. இங்கு வாழும் மக்கள் காடுகளை பாதுகாக்கும் பொறுப்புகளை ஏற்று இயற்கையை பாதுகாத்து வருகிறார்கள் என்பது பாராட்டத்தக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
அடுத்ததாக மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமங்களில் இருக்கும் வீடுகளில் கதவுகளை இல்லை. இங்கு வாழக்கூடிய மக்கள் தங்களது உடைமைகளை இறைவன் காப்பாற்றுவார் என்ற தைரியத்தில் இன்று வரை கதவுகளை இல்லாமல் வீடுகளை வடிவமைக்கிறார்கள்.
மேலும் மகாராஷ்டிராவில் இருக்கும் ஷெட்பால் கிராமத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் அதிகளவு காணப்படுகிறது. ஆனால் இந்த பாம்புகளை பார்த்து குழந்தைகள் கூட பயமின்றி விளையாடுவதை நீங்கள் காண முடியும். இதுவே இந்த கிராமத்தின் மிகப்பெரிய மர்மமாக உள்ளது.
பிகாரில் உள்ள கைமூர் மலையில் அமைந்துள்ள பர்வான் கிராமத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்பாத மக்கள் உள்ளார்கள். தேவையற்ற காரணங்களுக்காக அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை.
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கிராமத்தில் வீடுகளை விட கோவில்களை அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் இங்கு வசிக்கும் மக்கள் காலாணிகளை அணிய மறுக்கிறார்கள். இந்த கிராமமானது வெள்ளகவி என்று அழைக்கப்படுகிறது.
இது போன்ற இன்னும் சில கிராமங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அப்படி தெரிந்தால் அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கமெண்ட்களை பதிவு செய்யுங்கள்.