தாமரைத் தண்டில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்..! – இனி நீங்களும் யூஸ் பண்ணுங்க..
தேசிய மலரான தாமரைப் பூ பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த தாமரை மலரானது செல்வத்தின் அடையாளமாகவும், மகாலட்சுமி வாசம் செய்யும் பொருளாகவும் உள்ளது.
தாமரை மலரில் மட்டுமல்லாமல் அதன் தண்டிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனை நாம் பயன்படுத்துவதன் மூலம் நமது ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளை கொடுக்கும் என்பது இன்றுவரை பலருக்கும் தெரியாத விஷயமாகும்.
எனவே இந்த கட்டுரை பதிவில் தாமரை பூவில் இருக்கும் இலைகள், பூ, வேர், விதை ஆகியவற்றால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தாமரைத் தண்டைஆசியா மற்றும் ஜப்பானிய சமையல்களில் நிறைய உணவு வகைகளை செய்கிறார்கள். இந்த உணவின் மூலம் நமது உடலுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
தாமரைத் தண்டில் அதிகளவு நார் சத்துக்கள் இருப்பதால் நீராழிவு நோயாளிகள் இதனை வேகவைத்து அப்படியே உண்ணலாம். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தக்கூடிய பணியையும் செய்கிறது.
தாமரைத் தண்டில் இருக்கும் கோலின், இரும்பு சத்து குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாகும். எனவே குழந்தைகளுக்கு தாமரை தண்டை உண்ணக் கொடுக்கலாம் அல்லது கஷாயமாக வைத்தும் கொடுக்கலாம்.
ஒவ்வாமையால் ஏற்படும் காய்ச்சலை போக்கக்கூடிய சக்தி இந்த தாமரை தண்டிக்கு உள்ளது. இதனை கஷாயமாக நீங்கள் பருகுவதின் மூலம் உங்கள் காய்ச்சல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
மேலும் தாமரை தண்டில் அதிகப்படியான பொட்டாசியம் சத்து உள்ளதால் உங்களுக்கு இதய நோய் ஏற்படாமல் இருக்க உதவி செய்யும். மேலும் மாரடைப்பில் இருந்து உங்களை இது பாதுகாக்கும்.
இதில் அதிக அளவு வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் தோல் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. வைட்டமின் சி சத்தானது உங்கள் சருமம் வயதானது போல் இருக்கும் தோற்றத்தை தடுத்து இளமையாக உங்களை மாற்ற உதவி செய்கிறது.
தாமரைத் தண்டின் உள்ளே இருக்கும் வெள்ளை பகுதியில் அதிகளவு மாவுச்சத்து, புரதம் கனிமம் மற்றும் சில வேதிப்பொருட்களை கொண்டுள்ளது. இது உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு முதுமை அடைவதை தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
எனவே உங்களுக்கு தாமரை தண்டு கிடைக்கும் பட்சத்தில் அவற்றை நீங்கள் உதாசீனப்படுத்தாமல் உணவாக சமைத்து சாப்பிடுவதின் மூலம் மேற்கூறிய நன்மைகள் அனைத்தையும் பெற முடியும்.