தங்கத்தை ஏன் காலில் அணியக்கூடாது? மகாலட்சுமி என்பதாலா? – இல்லையெனில் உண்மை என்ன?
இந்துக்கள் பெரும்பான்மையினர் தங்க நகைகளை விரும்பி வாங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த தங்கத்தை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருளாக இன்று வரை கருதி அதற்குரிய மரியாதையை கொடுத்து வருகிறார்கள்.
மேலும் தங்கமானது பெரும்பாலும் அனைவராலும் விரும்ப படக்கூடிய ஒரு உலோகம். எந்த காலத்திலும் நமது பண பற்றாக்குறையை தீர்க்க உதவி செய்யக்கூடிய ஒன்று. எப்போதும் இதன் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் தங்கத்தில் முதலீடு என்பது இன்று அதிகரித்து வரக்கூடிய ஒன்று என கூறலாம்.
அந்த வகையில் பொதுவாக பெண்கள் அனைவருமே ஒரு குண்டு மணி அளவாவது தங்கத்தை அணிய வேண்டும், சேமிக்க வேண்டும் என்ற கருத்தை நமது முன்னோர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
எனவே தான் பெண்கள் அனைவரும் தங்கத்தை விரும்புகிறார்கள் என்று ஒரு பக்கம் கூறினாலும், இந்த தங்க ஆபரணங்களால் அவர்களது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதின் காரணத்தால் தான் அந்த ஆபரணங்கள் புனித தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தங்க ஆபரணங்களை நமது உடலின் ஒவ்வொரு பகுதிகளும் நாம் அணிவதற்கு பல்வேறு வகையான அறிவியல் காரணங்கள் உள்ளது. இவற்றை மறைத்து நமது முன்னோர்கள் ஆன்மீக ரீதியாக இதனை பயன்படுத்த வைத்ததோடு கலாச்சார ரீதியாகவும், நமது பாரம்பரிய ரீதியாகவும் தங்கத்தின் பயன்பாட்டை நாம் பயன்படுத்தும் படி வைத்திருக்கிறார்கள்.
உடலின் எல்லா பகுதிகளிலும் தங்கத்தை பயன்படுத்தக்கூடிய நாம் காலில் அணியும் பொருளாக பயன்படுத்தவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
காலில் அணியக்கூடிய அணிகலன்களாக வெள்ளி உலோகத்தை தான் பயன்படுத்துகிறோம். வெள்ளியில் செய்த கொலுசை மட்டுமே அணிகிறோம் என்பது உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால் கொலுசினை தங்கத்தில் செய்து ஏன் நாம் அணியவில்லை என்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா?.
தங்கத்தில் மகாலட்சுமி இருக்கிறார் என்ற காரணத்தால் தந்த ஆபரணங்களை கால் அணியக் கூடாது என்று நினைக்கிறீர்களா? மேலும் கொலுசு, மெட்டி போன்றவை வெள்ளியிலேயே உருவாக்கப்படுவதின் அறிவியல் காரணம் என்ன என்று தெரியுமா?
இந்த தங்க ஆபரணங்களை அணிவது அழகு என்று நினைப்பவர்களுக்கு பதிலளிக்க கூடிய வகையில் இதனால் எண்ணற்ற நன்மைகள் உள்ளது என கூறலாம். தங்க நகைகளை அணிவதின் மூலம் மனதில் தெளிவும், உறுதியும் ஏற்படுவதாக அறிவியல் கூறுகிறது.
இதற்குக் காரணம் இயற்கையாகவே தங்கத்திற்கு உறுதித்தன்மை அதிகம் இருப்பதால் அது நம் உடலோடு ஒட்டிக் கிடக்கும் போது மன பலத்தை அதிகரிக்கும்.
எனவே தங்கத்தை அணிவதின் மூலம் தன்னம்பிக்கை உணர்வு அதிகமாக ஏற்படும். எனவே தான் தங்க மோதிரம் தங்க சங்கிலி அணிபவர் பலரும் தன்னம்பிக்கையோடு இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் முன்னோர்கள் தாலியை தங்கத்தில் செய்யும் மரபை இந்த காரணத்தினால் தான் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
தங்கத்தை காலில் அணிந்தால் செல்வம் குறைந்து விடும் என்ற நம்பிக்கை பொய். காலில் தங்கம் இருந்தால் வாத நரம்புகளை தூண்டிவிட்டு உடலில் வீக்கமும் வலியும் ஏற்படும் என்ற அறிவியல் உண்மையை உணர்ந்து தான் காலில் தங்கத்தை அணியாமல் வெள்ளி ஆபரணங்களை அணிய நமது முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.
காரணம் வெள்ளியை காலில் அணியும் போது வாதத்தை கட்டுப்படுத்தி சமன் படுத்தக் கூடிய ஆற்றல் இந்த வெள்ளிக்கு உள்ளது என்பதால், தான் காலில் தங்கம் அணியாமல் வெள்ளியில் அணியச் சொல்லியிருக்கிறார்கள். இது தான் உண்மையான அறிவியல் உண்மை ஆகும்.