“அதிகாலை நடை பயிற்சி இவ்வளவு ஆரோக்கியமா..!”- இனி நீங்களும் நடப்பீர்கள்..
ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று எண்ணுவது இயல்பான விஷயம் தான். இந்த ஆரோக்கியத்தை பெரும் அளவு பேணிக் காக்க நீங்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இந்த நடை பயிற்சியை நீங்கள் செய்யும்போது உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதோடு, நோய்கள் தாக்காமல் இருப்பதற்கும் உதவி செய்யும். குறிப்பாக அதிகாலையில் நீங்கள் எழுந்து நடை பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
இப்படி அதிகாலையில் நடைபயிற்சியை மேற்கொள்ளும் உங்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே நடைபயிற்சியை நீங்கள் மேற்கொள்ளும் போது அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்லாமல், உங்கள் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இது உதவும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
நூறாண்டுகள் நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு நடை பயிற்சி மிகவும் முக்கியமானது என பல ஆய்வுகள் கருத்துக்களை தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீங்கள் அதிகாலை நடக்கும் போது உங்கள் எடை எளிதில் குறையும். எனவே குறைந்தபட்சம் தினமும் 30 நிமிடங்களாவது நீங்கள் நடக்க முயற்சி செய்வது நல்லது.
அதிகாலை நடை பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் உங்கள் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தை குறைக்க இது உதவி செய்யும்.
மேலும் இந்த நடைபயிற்சியை நீங்கள் மேற்கொள்வதின் மூலம் சில வகையான புற்று நோய்களின் அபாயத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற மருத்துவ ஆய்வுகள் தற்போது வெளி வந்து நடை பயிற்சியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
சர்க்கரை நோயாளிகள் குறிப்பாக டைப் 2 நீரழிவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் நடைபயிற்சியை கட்டாயம் மேற்கொள்வது அவசியம். இதன் மூலம் உங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
நீங்கள் தினமும் நடைபயிற்சி செய்வதின் மூலம் உங்கள் பதட்டம் குறைய கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நடைப்பயிற்சி உங்கள் நினைவாற்றலையும், உங்கள் கற்கும் திறனையும் மேம்படுத்தும் என்றால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஆனால் அவை அனைத்தும் உண்மையே.
நுரையீரல் பிரச்சனைகள் அதிகம் உள்ளவர்கள், நடைபயிற்சியை மேற்கொள்வதன் மூலம் அதன் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ளலாம். மூட்டுவலி உள்ளவர்கள், பாத வலி உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று நடை பயிற்சியை மேற்கொள்ளும் போது மேற்கூறிய நன்மைகள் அனைத்தும் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.