• November 21, 2024

தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா..! – சுவாரசிய தகவல்கள்..

 தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா..! – சுவாரசிய தகவல்கள்..

Emerald Dove

இந்தியாவின் தேசிய பறவையாக மயில் திகழ்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் மாநில பறவையாக மரகத புறா உள்ளது என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

அப்படி என்ன இந்த மரகத புறாவில் என்ன சிறப்பு உள்ளது இதை ஏன்? நமது மாநில பறவையாக மாற்றினார்கள் என்பது பற்றிய சுவாரசியமான தகவல்களை பற்றி எந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் மாநில பறவையான மரகத புறா ஆங்கிலத்தில் எமரால்ட் டோவ் (Emerald Dove) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் இதன் உடலில் பச்சை நிற இறகுகளும், சிவப்பு நிற அழகு கொண்டிருப்பதால் தான் இதை மரகதப்புறா என்று அழைக்கிறோம்.

Emerald Dove
Emerald Dove

இந்தப் புறாக்கள் தங்கள் குஞ்சுகளுக்கு பாலூட்டி வளர்க்கின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த புறாவின் தொண்டை பகுதியில் உள்ள கிராப் (Crop) எனப்படும் தொண்டை பையின் உட்சுவரில் திசுக்களில் தான் இந்த கிராப் மில்க் சுரக்கிறது.

இந்தப் பால் ஆனது திரவமாக இல்லாமல் பால் ஆடை போல சற்று கெட்டியாக இருக்கும். இதில் புரதச்சத்தும், கொழுப்பு சத்தும் அதிகளவு உள்ளது. ஆனால் கால்சியமோ, மாவு சத்து இல்லை.

Emerald Dove
Emerald Dove

தாய் புறா முட்டையிட்டதும் தாய் மற்றும் தந்தை இரண்டு புறாக்களுமே அடைக்காத்து குஞ்சுகள் வெளிவருவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பு இருந்தே இவற்றின் தொண்டைப் பையில் பால் சுரக்க ஆரம்பித்து விடும்.

அப்படி சுரந்த பாலை இது எதுக்களிப்பு செய்து தனது அலகுக்கு கொண்டு வந்து சிறு குஞ்சுகளுக்கு கொடுக்கிறது. சுமார் ஒன்று முதல் மூன்று வாரங்கள் வரை புறா குஞ்சுகள் எந்த பாலை மட்டும் தான் உண்டு உயிர் வாழும்.

Emerald Dove
Emerald Dove

மேலும் குஞ்சுகள் பொறிக்காத சமயத்தில் இந்த தொண்டை பகுதியில் இவை தற்காலிகமாக தானியத்தை கூட சேமித்து வைத்துக் கொள்ளும். அதுமட்டுமல்லாமல் அதி புத்திசாலியான இந்த மரகத புறாக்கள் தங்களை கண்ணாடியில் பார்த்து அதன் பிரதிபலிப்பை தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் படைத்தவை.

இந்த ஆற்றலை pass the mirror test என்று அழைப்பார்கள். இப்போது தெரிந்து கொள்ளுங்கள், ஏன் தமிழகத்தின் மாநில பறவையாக மணிப்புறாவை வைத்திருக்கிறார்கள் என்பது இதன் மூலம் உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.