• December 21, 2024

அட அழுதா காசா? – இறப்பு வீட்டில் அழுவதற்கு புக்கிங் செய்யப்படும் பெண்கள்..

 அட அழுதா காசா? – இறப்பு வீட்டில் அழுவதற்கு புக்கிங் செய்யப்படும் பெண்கள்..

Professional Mourners

உலகம் எங்கே சென்றது என்பதை கணிக்க முடியாதபடி சில நிகழ்வுகள் நம்மை ஆச்சிரியத்தில் தள்ளுவதோடு, இப்படி எல்லாம் நடக்க வாய்ப்புகள் உள்ளதா? அட.. இதற்கெல்லாம் காசு கொடுப்பார்கள் என்று என்ன கூடிய வகையில் பணம் வாங்கிக் கொண்டு இறுதி சடங்கு அழும் பெண்கள் பற்றிய விரிவான கருத்துக்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இவர்கள் அழும் போது அது உண்மையான கண்ணீரா? என்று யாராலும் கணிக்க முடியாது. எனினும் இவர்கள் ஓலம் போட்டு அழுவதற்காகவே புக் செய்யப்பட்டு அதற்காக பணமும் கொடுக்கப்படுகிறது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

Professional Mourners
Professional Mourners

இறப்பு வீடுகளில் அழுவதற்கு என்று புக் செய்யப்படக்கூடிய இந்த பெண்களுக்கும் இறந்த குடும்பத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இருக்காது. இவர்களை ப்ரொபஷனல் Mourners என்று அழைக்கிறார்கள்.

இத்தகைய நபர்களை எகிப்து, தெற்காசிய நாடுகள் ரோம் மற்றும் கிரேக்க நாடுகளில் பணத்தை கொடுத்து இறந்தவர்களின் வீடுகளில் அழ வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இது மாதிரி பணம் கொடுத்து அழ வைக்க கூடிய நபர்கள் இன்னும் நம்ம ஊருக்கு வரவில்லை என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் மேற்கூறிய நாடுகளில் இறந்தவர்களின் வீடுகளில் அழ தொழில் முறை துக்கம் அனுஷ்டிக்க படக்கூடிய எந்த பெண்களை வரவழைத்து அழ வைக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு சத்தமாக அழுகிறார்களோ அந்த அளவுக்கு இறந்தவர்களோடு சொந்தம் உடையவர்களாக நினைக்கிறார்கள்.

Professional Mourners
Professional Mourners

இத்தகைய பழக்கம் இந்தியாவில் இருக்கிறதா? என்றால் ராஜஸ்தான் பகுதியில் இருக்கும் ரூடாலீஸ் எனப்படும் பெண்கள் கூட்டம் இந்தத்  பிரபஷனல் Mourners தொழிலை பார்த்து வருகிறது என கூறலாம்.

இந்தப் பெண்களை திருமணம் ஆகி செல்லும் மேல் ஜாதி பெண்களோடு அனுப்பி வைக்கிறார்கள் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் மார்ப்பிலும், தலையிலும் போட்டு தரையில் உருண்டு அழும் இவர்களுக்கு ஐந்து முதல் ஆறு ரூபாய் வரை தான் கட்டணமாக கொடுக்கிறார்கள்.

மேலும் இவர்களுக்கு உண்ண உணவும், உடையும் கொடுக்கப்படுகிறது. இந்தப் பெண்களை அந்த ஊரின் தலைவர் கவனித்துக் கொள்கிறார். கருப்பு நிற உடைகளை மட்டும் அணியக்கூடிய இந்த பெண்கள் எமனுக்கு பிரியமான பெண்களாக கருதப்படுகிறார்கள்.

Professional Mourners
Professional Mourners

எனவே நாம் இறந்த பிறகு நமக்காக எந்த சொந்தம் அழும் என்ற கவலை இனிமேல் தேவையே இல்லை. இந்த பெண்களை அழைத்தால் சொந்தக்காரர்களை விட அதிக அளவு பாசம் உரிய நபர்களைப் போல அழுது பணத்தையும் பெற்றுச் செல்வார்கள்.

எந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் உங்கள் கருத்துக்களை எங்களோடு மறவாமல் பகிர்ந்து கொள்ளலாம்.