• December 5, 2024

Xoxo காதலர் தின சோக வரலாறு… என்ன சொல்கிறது?..

 Xoxo காதலர் தின சோக வரலாறு… என்ன சொல்கிறது?..

Lovers day

புத்தாண்டுக்கு அடுத்து சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது காதலர் தினம் தான். பூக்கள், பரிசுகள், முத்தங்கள் தாண்டி காதலர் தினம் உருவான சோக வரலாறு தெரியுமா? அதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்

ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை விட்டுள்ளார். 

Lovers day
Lovers day

இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைக்கிறார்.

இதனையறிந்த மன்னன் வால்ண்டைனை கைது செய்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால்,

சிறைக்காவலருக்கு இது தெரியவர அஸ்டோரியசை வீட்டு காவலில் வைத்தான். அப்போது தான் வாலண்டைன் அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பினார்.

இதே நேரத்தில் தான் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவை செய்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கொல்லப்பட்டார். 

Lovers day
Lovers day

அந்தநாள் கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள். இந்த நாளை வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐரோப்பிய முழுதும் பிப்ரவரி 14 வாலண்டைன் தினம் விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது. கவிஞர்கள் அதை பாடினார். 

ஷேக்ஸ்பியர் ரோமியோ ஜூலியட்டை எழுதினார். சுவரசியமாக ஆண்டுதோறும் வாலண்டைன் தினத்தில் 1000 க்கும் மேற்பட்ட காதல் கடிதங்கள் ஜூலியட் பெயருக்கு வந்து சேர்கிறது.

1537 ல் இங்கிலாந்து அரசர் ஹென்றி(Henry VII) பிப்ரவரி 14 அதிகாரப்பூர்வ வாலண்டைன் தினமாக அறிவித்தார். விக்டோரியா மகாராணி காலத்தில் வாழ்த்து அட்டைகளில் கையெழுத்து ஈடுவது கெட்ட சகுனமாக கருதப்பட்டதால் அவர்கள் x என்று எழுதினர். இதையே தற்போது Xoxo என்று சொல்வதின் தோற்றம்.Xoxo என்றால் கட்டி அனைத்து ஒரு உம்மா தா என பொருள்.

Lovers day
Lovers day

இந்நிலையில் இந்தியாவில் காதலர் தினம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பிரபல திருமண தகவல் இணையதளமான ஷாதி டாட் காம் கருதது கணிப்பை நடத்தியது. நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த 8,200 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. திருணம் ஆன, திருமணம் ஆகாத 20 -35 வயது கொண்ட, ஆண், பெண் இருபாலரிடமும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீங்கள் மிகவும் விரும்பும் நாள் எது? என்ற கேள்விக்கு 61 சதவீதம் பேர் தங்கள் பிறந்தநாள் எனக்கூறியுள்ளனர். 36 சதவீதம் பேர் புத்தாண்டு என கருத்து தெரிவித்துள்ளனர். 3 சதவீதம் பேர் மட்டுமே காதலர் தினம் எனக் கூறியுள்ளனர்.